வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம்
வங்கபந்து சர்வதேச மாநாட்டு மையம் (Bangabandhu International Conference Center) வங்காளதேசத்தின் டாக்காவைச் சேர்ந்த காவல் மாவட்ட செர்-இ-பங்களா நகரத்தில் அமைந்துள்ளது. முன்னதாக வங்கதேச சீன நட்புறவு மாநாடு மையம் என்று அழைக்கப்பட்டது. வங்காளதேசத்தின் ஒரே சர்வதேச மாநாட்டு மையமென்ற சிறப்பு இம்மையத்திற்கு உண்டு. [1] பெய்கிங் கட்டடக்கலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் இம்மையம் வடிவமைக்கப்பட்டது. [2]
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம் Bangabandhu International Conference Center | |
---|---|
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র | |
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம் | |
முந்திய பெயர்கள் | வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம் |
மாற்றுப் பெயர்கள் | வங்கதேச சீன நட்புறவு மாநாட்டு மையம் |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவு |
வகை | மாநாடு வசதி |
கட்டிடக்கலை பாணி | நவீனக் கட்டடக்கலை |
இடம் | அகார்கௌன், செர்-இ-பங்களா, டாக்கா |
நகரம் | டாக்கா |
நாடு | வங்காளதேசம் |
ஆள்கூற்று | 23°46′09″N 90°22′54″E / 23.7693°N 90.3816°E |
நிறைவுற்றது | 2001 |
திறக்கப்பட்டது | 2002 |
செலவு | US$5 மில்லியன் |
தரைகள் | 50,000 m2 (538,200 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பெய்கிங் கட்டடக்கலை வடிவமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
பிற தகவல்கள் | |
தரிப்பிடம் | 700 |
வலைதளம் | |
Bangabandhu International Conference Center |
சிறிய மற்றும் பெரிய அளவிலான நிகழ்வுகள், மாநில செயல்பாடுகள், சமூக நிகழ்வுகள், கருத்தரங்குகள், மாநாடுகள், தயாரிப்பு வெளியீடுகள், வருடாந்திர பொதுக் கூட்டங்கள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், நிகழ்நேர காட்சிகள் போன்றவற்றை நடத்த இங்கு பதினேழு தளங்கள் உள்ளன. 13 வது சார்க் மாநாடு உட்பட பல பன்னாட்டு மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகள் பங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம் நடத்தியுள்ளது.[3]
படக்காட்சி
தொகு-
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையத்தின் வடமேற்குப் பகுதி
-
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையத்தின் கிழக்கு-வடக்கு நோக்கிய பிரதான நுழைவாயில்
-
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையத்தின் முன்புறம்
-
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையத்தின் பிரதான கட்டடம்
-
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையத்தின் மேற்கு சுவர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dhaka International Trade Fair-2014". Ditf-epb.gov.bd. Archived from the original on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.
- ↑ Bangabandhu International Conference Center
- ↑ "13th SAARC summit opens in Dhaka". China Daily. http://www.chinadaily.com.cn/english/doc/2005-11/12/content_494136.htm.