வங்காளதேசக் குண்டு வெடிப்பு, 2005

2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தியதி வங்காளதேசத்தின் மொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 63 மாவட்டங்களில் 300 இடங்களில் 500 குண்டுகள் வெடித்தது. காலை 11:30 மணிக்கு குண்டு வெடிக்க ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் குண்டு வெடிப்புச் செயலுக்கு வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த இயக்கத்திற்கு அல் காயிதா இயக்கத்தோடு தொடர்பு இருக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. மேலும் ஹர்கத்-உல் ஜிகாத் அல் இஸ்லாமி (Harkat-Ul Jihad al Islami) என்ற இயக்கமும் இக்குண்டு வெடிப்பில் வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தோடு இணைந்திருந்தோம் என அறிவித்தது. வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் இயக்கமானது அப்துர் ரஹ்மான் தலைமையில் இயங்கும் அமைப்பாகும். இந்த இரு இயக்கங்களும் வங்காளதேச அரசால் தடை செய்யப்பட்டன. 2006 ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேடுதல் வேட்டையில் அப்துர் ரஹ்மான், பங்களா பாய் மற்றும் இவர்களது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.[1] அதில் 4 பேருக்கு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தியதி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.[2] இக்குண்டு வெடிப்பில் 2 பேர் மரணமடைந்தனர் 50 பேர் காயமடைந்தனர்.[3]

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ."Top Bangladesh militant captured: police" பரணிடப்பட்டது 2007-03-31 at the வந்தவழி இயந்திரம், Reuters news report, 6 March 2006.
  2. "Bangladesh seeks regional cooperation against terrorism"[தொடர்பிழந்த இணைப்பு], PTI News, 24 Feb 2009
  3. "Bombs explode across Bangladesh". BBC News. August 17, 2005. பார்க்கப்பட்ட நாள் August 17, 2013.