வங்காளதேசத்தில் இரத்த தானம்
வங்காளதேசத்தில் இரத்த தானம் (Blood donation in Bangladesh) பல்வேறு நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படும் ஒரு நடவடிக்கை ஆகும். 2011 ஆம் ஆண்டு தரவுகளின் படி, 25% இரத்தம் தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்டது ஆகும். 20% முதல் 25% வரையிலான இரத்தம் நன்கொடை மூலமாகவும், 50% முதல் 55% வரையிலான இரத்தம் குறிப்பிட்ட ஒரு நோயாளிக்காக அவரைச் சார்ந்தவர்களிடமிருந்து ஒரேயொரு முறையும் பெறப்பட்டது.
பின்புலம்
தொகுவங்காளதேசத்தில் இரத்த பரிமாற்ற சேவை 1950 ஆம் ஆண்டிலிருந்து [1] டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கிடைக்க பெற்றது. தொழில்முறை இரத்த நன்கொடையாளர்கள் நாட்டின் முக்கிய இரத்த நன்கொடையாளிகளாக இருந்தனர். 2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொடையாகப் பெறப்பட்ட இரத்தத்தில் 47% இத்தகைய தொழில்முறை கொடையாளிகளிடமிருந்தே பெறப்பட்டது. இரத்தம் வழங்கல் செயல்முறையில் உண்டாகும் தூய்மைக்கேடும், தன்னார்வக் கொடையாளிகளின் தேவையும் நன்கு உணரப்பட்டது[1]. ஆண்டுக்கு 5,00,000 அலகுகள் இரத்தம் தேவை எனத் திட்டமிடப்பட்டது. தன்னார்வலர்களிடமிருந்து 25 சதவீதமும், 20 முதல் 25 சதவீதம் நன்கொடை இரத்த தானம் வழியாகவும் பெறப்பட்டது.[2]
சேந்தானி
தொகுவங்காளதேசத்தில் முதன் முதலாக திட்டமிடப்பட்ட தன்னார்வ ரத்த தான திட்டம் சேந்தானி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாளில் வங்காளதேச மருத்துவக் கல்லூரியில் இந்த இரத்ததானத் திட்டம் உருவானது. நோயாளிகளுக்கு இரத்ததானம் செய்வது என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், கண் தானம் செய்வது ஏழை நோயாளிகளுக்கு நிதியுதவி அளிப்பது என்ற பரந்த நோக்கங்களுடன் மேலும் விரிவடைந்தது. இன்று வங்காளதேசத்தில் இயங்கும் பல கல்லூரிகளில் இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. [3] தற்போது இத்திட்டம் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.[4]
செம் பிறைச் சங்கம்
தொகுவங்கதேசத்தில் செம் பிறை சங்கம் என்ற தொண்டு நிறுவனம் 1973 ஆம் ஆண்டில் வங்காளதேச செஞ்சிலுவைச் சங்கத்தை தொடங்கியது. 1989 ஆம் ஆண்டில் வங்காளதேச செஞ்சிலுவைச் சங்கம் என்ற பெயர் வங்காளதேச செம்பிறைச் சங்கம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கத்தின் தலைமையகம் டாக்காவில் உள்ளது. 1981 இல் [5]நாட்டில் இரத்ததான முகாம் திட்டத்தை இச்சங்கம் தொடங்கியது. இன்று நாடெங்கிலும் பல மையங்களில் முழுமையாக இரத்ததானம் செய்வதோடு இரத்தத்தின் பகுதிக் கூறுகளையும் கொடையளிக்கும் திட்டத்துடன் சேவைபுரிகிறது. இவை தவிர வெள்ளம், புயல் மற்றும் பிறவகை இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளில் தேவையான உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறது. [5]
பதான்
தொகுமாணவர்கள் மத்தியில் நன்கொடை இரத்ததானத்திற்கு இருந்த வரவேற்பைக் காட்டிலும், தன்னார்வ இரத்ததானத்திற்கு பேரளவிலான ஆதரவு இருப்பதை, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் 1997 ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பில் கண்டறிந்தனர். எனவே ஒரு பொதுப்பரப்புரை இயக்கத்திற்கு அவர்கள் பரிந்துரைத்தனர். நாடெங்கிலும் உள்ள மாணவர்கள் மத்தியில் தன்னார்வ இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இத்திட்டத்தில் பங்கேற்க வைப்பது இப்பரப்புரையின் முக்கிய அம்சமாக இருந்தது[6]
இதன் விளைவாக 1997 இல் பதான் என்ற பெயரில் அரசியல் சார்பற்ற இரத்தக் கொடையாளிகள் அமைப்பு வங்காளதேசத்தில் உருவானது. [7] இலவசமாக இரத்த வகையைக் கண்டறியும் முகாமை நடத்தியது, இவ்வமைப்பின் முதலாவது நடவடிக்கையாகும். 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் டாக்கா பல்கலைக்கழக சாகிதுல்லா அரங்கத்தில்[7] இம்முகாம் நடைபெற்றது. டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிக அருகில் இந்த அரங்கம் அமைந்திருந்தது. நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படுவோர் இவ்வரங்கத்திலோ அல்லது அதற்கு அருகிலோ வழக்கமாக ஒன்றுகூடி உதவி கோருவார்கள்[7]. முகம்மது சாகிதுல் இசுலாம் இரிப்பொனும் அவருடைய மாணவர்களும் இத்திட்டத்தின் முதன்மையான முன்னோடிகளாக இருந்தனர்[8]
பதான் அமைப்பினரால் வழங்கப்படும் இரத்தம் சேமிக்கப்பட்ட இரத்தமாக இல்லாமல் உடனுக்குடன் புதியதாக பெறப்படும் இரத்தமாக இருந்தது[8]. இரத்தவகையை முன்னதாகச் சோதித்து வகைப்படுத்தியிருந்த தரவுகளை இவர்கள் பயன்படுத்தினர். பதான் அமைப்பில் பட்டதாரி மாணவர்களும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களும் முக்கியமான அங்கத்தினர்களாக இருந்தனர். 14 பல்கலைக்கழகங்களிலும் 29 பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் பதான் அமைப்பு வெற்றிகரமாக செயல்படுகிறது[7] The organization is active in 14 universities and 29 university colleges.[8].
புது இரத்தம் தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோயாளிகளுக்கு தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்வதும் இயற்கைப் பேரிடர் காலங்களில் ஏழை எளியோருக்கு உதவி செய்வதும் பதான் அமைப்பின் மற்ற செயல்பாடுகளாகும்[9].
அமைப்பிற்கான நிதி உதவி முதலில் உறுப்பினர்களிடமிருந்தும் முன்னாள் உறுப்பினர்களிடமிருந்தும் பெறப்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிர்வாகத்தினர் முதலானவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது[8] . வங்காளதேசத்திற்கு வெளியே கலிபோர்னியாவின் சிபாந்தன் பி என்ற இலாபநோக்கற்ற நிறுவனம் குறிப்பிடத்தக்க ஒரு பங்களிப்பை அளித்து வருகிறது[10]. இரத்ததானம் அளிப்பது ஒரு சமூக இயக்கமாக மாற வேண்டும் என்பது பதான் அமைப்பின் விருப்பமாகும். இரத்தம் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக யாரும் மரணத்தை தழுவக்கூடாது, ஒவ்வொருவரும் அவரவர் இரத்த வகையை அறிந்து வைத்திருத்தல் வேண்டும் என்பன இவ்வமைப்பின் உடனடி நோக்கங்களாகும். டாக்கா பல்கலைக்கழகத்தின் தரைத்தளத்தில் பதான் அமைப்பு அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Islam, M. B. (2009). "Blood transfusion services in Bangladesh". Asian Journal of Transfusion Science 3 (2): 108–110. doi:10.4103/0973-6247.53880. பப்மெட்:20808657.
- ↑ Nurul Islam Hasib (14 June 2011). "Let Bangladeshi youth's blood 'flow'". bd24news.com. http://www.bdnews24.com/details.php?id=198380&cid=2.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sandhani, official web site, history". Archived from the original on 2016-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.
- ↑ "Sandhani, official web site, contacts". Archived from the original on 2016-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.
- ↑ 5.0 5.1 "Bangladesh Red Crescent Society: Blood Program".
- ↑ Hosain, G.M.M.; Anisuzzaman, M.; Begum, A. (1997). "Knowledge and attitude towards voluntary blood donation among Dhaka University students in Bangladesh". East African Medical Journal 74 (9): 549–553. பப்மெட்:9487428.
- ↑ 7.0 7.1 7.2 7.3 Mahmud-Ur-Rashid (1 February 2007). "Campus Spotlight: Badhan". Star Campus (The Daily Star (Bangladesh)). http://archive.thedailystar.net/campus/2007/02/01/camspotlight_BADHAN.htm.
- ↑ 8.0 8.1 8.2 8.3 "BADHAN (A Voluntary Blood Donor's Organization): Official Web Site". Archived from the original on 20 அக்டோபர் 2004. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
- ↑ "Co-curricular activities". Archived from the original on 2016-02-10. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.
- ↑ "SpaandanB project: Badhan Blood Transfusion Centre". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.