வங்காளதேச சீர் நேரம்
வங்காளதேச சீர்தர நேரம் (Bangladesh Standard Time, வங்காள மொழி: বাংলাদেশ মান সময়), வங்காளதேசத்தின் நேர வலயம் ஆகும். இது வழமையாக பிஎஸ்டி அல்லது வ.சீ.நே என சுருக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திற்கு ஆறு மணி நேரம் முன்னதாக உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே நேர வலயமாக உள்ளது. மின் பற்றாக்குறையால் 2009இல் பகலொளி சேமிப்பு நேரம் கொண்டுவரப்பட்டது;[1] ஆனால் 2010இல் இது நீக்கிக் கொள்ளப்பட்டது.[2] இந்த நேரவலயம் வங்காளதேசத்தின் தாக்கா கோட்டத்தில் மானிக் கஞ்ச் மாவட்டதில் அரிராம்பூர் உள் மாவட்டத்தில் உள்ள அருகுண்டி ஒன்றியத்தில் செல்லும் 90.00° E நிலநிரைக்கோட்டை அடிப்படையாக கொண்டுள்ளது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Bangladesh adopts new time rules. Retrieved on 2009-06-20.
- ↑ Cabinet cancels Daylight Saving Time Retrieved on 2010-04-18.