வங்காளதேச வெற்றி நாள்

வெற்றி நாள் (வங்காள: বিজয় দিবস பிஜோய் திபோஸ்) 1971இல் திசம்பர் 16 அன்று வங்காளதேச விடுதலைப் போரில் மித்ரோ பாகினிப் (நேசப்படைகள்) படைகள் பாக்கித்தானியப் படையை வென்றதை கொண்டாடும் வங்காளதேச தேசிய விடுமுறைநாளாகும். இந்நாளில் பாக்கித்தானியப் படைகளின் தலைமை தளபதி ஏ. ஏ. கே. நியாசி தனது படைகளுடன் மித்ரோ பாகினிப் படைகளின் தளபதி ஜகஜித்சிங் அரோராவிடம் சரணடைந்தார்; இது ஒன்பது மாதங்கள் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. [1] அலுவல்முறையாக பாக்கித்தானிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானது.

வெற்றி நாள்
বিজয় দিবস
Victory Day Parade.jpg
வெற்றி நாள் அணிவகுப்பு, 2012. தேசிய அணிவகுப்பு மைதானம், டாக்கா, வங்காளதேசம்.
அதிகாரப்பூர்வ பெயர்வங்காள: বিজয় দিবস (பிஜோய் திபோஸ்)
கடைபிடிப்போர் Bangladesh
கொண்டாட்டங்கள்கொடியேற்றம், அணிவகுப்புகள், நாட்டுப்பற்று பாடல்களையும் நாட்டுப் பண்ணையும் பாடுதல், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பேச்சுக்கள், பண்பாட்டு நிகழ்ச்சிகள்.
நாள்16 திசம்பர்
காலம்1 நாள்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனவங்காளதேசத்தின் விடுதலை நாள்

இந்தியாவில் வெற்றி நாள்தொகு

இந்தியாவும் 1971இல் பாக்கித்தானை வென்ற நாளாக இந்த நாளை விசய் திவசு (வெற்றி நாள்) எனக் கொண்டாடுகின்றது.

வெற்றிநாளைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்வுகள்தொகு

  • 1971: பாக்கித்தான் ஸ்டேட் வங்கி வங்காளதேச வங்கியானது.[2]
  • 1972: வங்காளதேச மக்கள் குடியரசின் அரசியலமைப்பு திசம்பர் 16 அன்று சட்டமாக இயற்றப்பட்டது.[3]
  • 1973: விடுதலைப் போர் வீர விருதுகள் வங்காளதேச கெசட்டில் அறிவிக்கப்பட்டது.
  • 1996: வெற்றியின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
  • 2007: பீர் சிரேஸ்தோ (சீர்மிகு வீரர்) மதியுர் ரகுமானின் உடல் வங்காள தேசத்திற்கு திசம்பர் 10 அன்று மீட்டுவரப்பட்டது.
  • 2013: மிகக்கூடிய தன்னார்வலர்கள் பச்சை, சிவப்பு அட்டைகளுடன் ஒன்றுகூடி தேசிய அணிவகுப்பு மைதானத்தில் வங்காளதேசக் கொடி வடிவத்தை உருவாக்கி புதிய உலக சாதனையை உருவாக்கினர்.[4][5]

மேற்சான்றுகள்தொகு