வசந்தி என். பட்-நாயக்

கணிதவியலர்

வசந்தி என்.பட்-நாயக் (Vasanti N. Bhat-Nayak) என்பவர் மும்பை பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறைத் தலைவராகப் பணியாற்றியவர் ஆவார். மேலும் இவர் சேர்வியல் பாடப்பிரிவின் பேராசியராகவும் விளங்கினார். வசந்தி நாயக் 1938 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். உட்கணங்கள், இருமாறி வரைபடங்கள், நயமான வரைபடங்கள், வரைபடச் சமன்பாடுகள் மற்றும் இதர வரைபடக் கோட்பாடுகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.

வசந்தி என். பட்நாயக்
Vasanti N. Bhat - Nayak
பிறப்பு10 சூன் 1938, இந்தியா
இறப்பு12 பிப்ரவரி 2009
செம்பூர்
குடியுரிமைஇந்தியன்
துறைசேர்வியல் கணிதம்
பணியிடங்கள்மும்பை பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மும்பை பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்எசு.எசு. சிறீகாந்து
அறியப்படுவதுவரைபடக் கோட்பாடு, சேர்வியல் கணிதம்

பூனாவில் கொங்கணி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கவுடு சரசுவத் பிராமணக் குடும்பத்தில் வசந்தி நாயக் இவர் கணிதத்தில் தனது முதுநிலைப் பட்டத்தை பூனே பல்கலைக் கழகத்தில் பெற்றார். சேர்வியல் கணிதத்தில் முனைவர் பட்டத்தை மும்பை பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். எசு.எசு. சிறீகாந்து இவருடைய வழிகாட்டிப் பேராசியராக இருந்தார்[1].

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 அன்று வசந்தி நாயக் செம்பூரிலுள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. கணித மரபியல் திட்டத்தில் வசந்தி என். பட்-நாயக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தி_என்._பட்-நாயக்&oldid=2775054" இலிருந்து மீள்விக்கப்பட்டது