வசம்பு
Sweet flag
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Acorales
குடும்பம்:
Acoraceae
பேரினம்:
Acorus
இனம்:
A. calamus
இருசொற் பெயரீடு
Acorus calamus
லி.

வசம்பு (Acorus calamus, பொதுவாக Sweet Flag அல்லது Calamus) ஒரு மூலிகை ஆகும். இது பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.[1][2][3]

வசம்பு அரபு நாடுகளையோ இந்தியாவையோ சேர்ந்ததாக இருக்கலாமெனக் கருதப்பட்டாலும், அவை தவிர ஐரோப்பா முழுவதிலும், தென் உருசியாவிலும், சின்னாசியாவின் வடக்கிலும், தென் சைபீரியா, சீனா, இந்தோனேசியா, யப்பான், மியான்மர், இலங்கை, அவுத்திரேலியா, தென் கனடா, ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களிற் பரவலாகக் காணப்படுகிறது.

வளரியல்பு

தொகு

வசம்பு ஆறு, ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு. இதன் பிறப்பிடம் தென்கிழக்கு அமெரிக்கா. இது இந்தியாவில் மணிப்பூரிலும், நாகமலையிலும் கேரளாவிலும் அதிகமாக வளர்கிறது. சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் நீர் பிடிப்புள்ள பகுதிகள் மிகவும் ஏற்றவை. வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன் படுகிறது. இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும். வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையுடையவை. இதன் தண்டு வேர் பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற்பகுதி சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி நீளம் வரை படரும். வேர்கள் தான் வசம்பு என்பது. நட்ட ஒரு ஆண்டில் பயிர் மூதிர்ந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அதாவது ஒரு ஆண்டில் கிழங்கை வெட்டி எடுக்க வேண்டும். இந்த வசம்பில் அசரோன், அகோரின் மற்றும் கொலாமினால் போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன. இது நல்ல வாசனையையுடையது. இது கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறுது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lansdown, R.V. (2014). "Acorus calamus". IUCN Red List of Threatened Species 2014: e.T168639A43116307. doi:10.2305/IUCN.UK.2014-1.RLTS.T168639A43116307.en. https://www.iucnredlist.org/species/168639/43116307. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Acorus calamus L." Plants of the World Online. Board of Trustees of the Royal Botanic Gardens, Kew. 2023. பார்க்கப்பட்ட நாள் 2 August 2023.
  3. Sylvan T. Runkel; Alvin F. Bull (2009) [1979]. Wildflowers of Iowa Woodlands. Iowa City, Iowa: University of Iowa Press. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781587298844. பார்க்கப்பட்ட நாள் 13 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசம்பு&oldid=4102748" இலிருந்து மீள்விக்கப்பட்டது