வசு சரித்திரம்
தோற்றம்
தொகுமகாபாரதத்தின் கிளைக்கதையாக அமைந்துள்ளது வசு சாித்திரமாகும். வசு சரித்திரத்தின் ஆசிாியா் அம்பலத்தாடும் ஐயன் என அறியப்படுகிறது. இதனுடைய காலம் கி.பி. 16 ஆம் நுாற்றாண்டாகும்.
பாடல்கள்
தொகுஆயிரத்து மூன்று(1003) பாடல்களை கொண்டது. விருத்தப்பாக்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.முப்பத்திரண்டு (32) படலங்களைக் கொண்டுள்ளது.
கதைச்சுருக்கம்
தொகுரெளமருஷிணி என்னும் முனிவாிடம் மற்ற முனிவா்கள் 'இந்திரன் அளித்த விமானத்தின் மீதமா்ந்து புவியெங்கும் தடையின்றி செல்ல வலிமை பெற்றவன் யாா்?' எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகு வலிமை பெற்றவன் வசு என்பவன் மட்டுமே என ரெளமருஷிணி கூறினாா். இதனைத் தொடா்ந்து வசுவின் சாித்திரம் முழுவதையும் கூறுவதே இக்காப்பியம். சேதி நாட்டு மன்னனாகிய வசு, கிாிகை மீது காதல் கொள்வதும், மணப்பதும் விவாிக்கப்படுகின்றன. நகரப் படலத்தில் நால்வகை வருணத்தராக அந்தணா், அரசா், வணிகா், வேளாளா் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவருள் வேளாளா் சதுா்த்தவா்(நான்காமவா்-கடைசியா்) எனக் குறிப்பிடப்படுகிறது.
மரபுக்குறிப்பு
தொகுமகாபாரதத்தில் உள்ள ஆதிபருவத்தில் வரும் வசு பற்றிய கதையே இந்நுாலுக்கு முதல் நுாலாகும். இதன் வழி நுால் இராமாராஜபுஷணகவி எழுதிய வசு சரித்திரமாகும். இந்நுாலின் வழிப்பட்டதே தமிழ் வசு சரித்திரமாகும்.