வச்ரதாரர்
.
வச்ரதாரர் அல்லது வஜ்ரதாரர் (वज्रधार) திபெத்திய பௌத்த சித்தாந்தத்தின் சாக்ய, கெலுக் மற்று கக்யு பிரிவுகளின்படி இவரே ஆதிபுத்தர் ஆவார். இந்திய புத்தமதத்தின் படிமலர்ச்சியில் சமந்தபத்திரரின் இடத்தை வஜ்ரதாரர் நிரப்பினார்.
திபெத்திய அண்டவியலில் சமந்தபத்திரரும் வஜ்ரதாரரும் ஒரே தன்மையுடைய வெவ்வேறு பெயர்களுடைய (Cognate Deities) புத்தராக கருதப்படுகின்றனர். இருவரும் வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு கூறுகள் மற்றும் வெவ்வேறு சித்தரிப்புகளை கொண்ட ஒரே தன்மையுடைய புத்தரையே குறிக்கின்றனர். இருவருமே தர்மகாய புத்தர்களாக கருதப்படுகின்றனர். பொதுவாக சமந்தபத்திரர் ஆபரண அலங்காரங்கள் இல்லாதவராகவும் வஜ்ரதாரார் அணிகலன்கள் அணிந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.[1][2]