வஞ்சிப்பாட்டு
வஞ்சிப்பாட்டு என்பது மலையாள மொழியில் ஒரு கவிதை வடிவம் ஆகும். இது திராவிட மீட்டர் நத்தோனாட்டாவில் அமைந்துள்ளது. இது இந்தியா வின் கேரள மாநிலத்திலிருந்து உருவானது.
வரலாறு
தொகுஇந்த கவிதை வடிவம் ராமபுரத்து வாரியர் என்பவரால் உருவாக்கப்பட்டது. மன்னர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆட்சியின் போதுஇக்கவிஞர் திருவாங்கூரில் (பின்னர் கேரளாவின் இது ஒரு பகுதியாக மாறியது) வாழ்ந்தார். இது மார்த்தாண்ட வர்மா மன்னருடன் ராமபுரத்து வாரியரின் படகு பயணத்தின் போது உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. வாரியர் தனது கவிதையை மன்னரிடம் ஓதினார். இந்தக் கவிதை பின்னர் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான குசேலவ்ருத்தம் வஞ்சிப்பாட்டு ஆனது.[1]
சொற்பிறப்பியல்
தொகுவஞ்சிப்பாட்டு என்ற சொல் இரண்டு வார்த்தைகளின் கலவையாகும், வஞ்சி என்றால் படகு மற்றும் பாட்டு என்றால் பாடல். இந்த கவிதை வடிவத்தில் படகில் படகோட்டுதல் போன்ற ஒரு தாளம் உள்ளது. எனவே இதற்கு இந்த பெயர் கிடைத்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
சில பிரபலமான வஞ்சிப்பாட்டு பட்டியல்
தொகு- குசேலவிருத்தம்
- லட்சுமணோபதேசம்
- பார்த்தசாரதி வர்ணனா
- பீட்சுமபர்வம்
- சந்தானகோபாலம்
- பாணயுத்தம்
பிரபல வஞ்சிப்பாட்டு கவிஞர்கள்
தொகு- வாலடிசேரி சங்கரநாராயணன் ஆச்சாரி
- சம்பக்குளம் புத்தன்புரயில் சோசப்
- ஐ. சி. சாக்கோ
- சிறயின்கீழ் கோவிந்தன் பிள்ளை
- நெடும்பரயார் கோபாலபிள்ள வைத்யன்
மேலும் காண்க
தொகு- ராமபுரத்து வாரியர்