இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கொரியா தொடர்ந்து ஜப்பானியக் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜப்பானை சரணடைய வைக்க சோவியத் யூனியன் இராணுவம் கொரியாவை மீட்பதாக இருந்தது. ஆனால், கொரியாவை சோவியத்தின் மேலாதிக்கத்துக்கு விட மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அமெரிக்கப் படைகள் தெற்குப் பக்கத்தில் இருந்து மேலாகவும், சோவியத் படைகள் வடக்கு பக்கத்தில் இருந்து கீழாகவும் ஜப்பானை எதிர்த்துப் போராடி சரணடைய வைத்தன. கொரியா 38 parallel கோட்டில் வடகொரியா சோவியத் சார்பாகவும் தென்கொரியா அமெரிக்கா சார்பாகவும் பிளவு பட்டது.
கொரியாவின் இறையாமையை உறுதிசெய்ய முடியாத அப்போதைய உலக வல்லரசுகளான சோவியத் யூனியனும் அமெரிக்காவும் கொரியாவை பிளவு படுத்தி வடகொரியா தென்கொரியா என பிரித்தன. இந்த பிரிப்பில் கொரிய மக்களின் அபிலாசைகள் கேட்கப்படவில்லை.