வடக்காலத்தூர் சிதம்பரேசுவரர் கோயில்

வடக்காலத்தூர் சிதம்பரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் கீழ்வேளூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் இலுப்பூரிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.[1]

இறைவன், இறைவி தொகு

தானே தோன்றியவராக உள்ள இறைவன் அண்ணாமலையார் என்றும் அண்ணாமலைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி உண்ணாமுலையம்மன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.[1]

அமைப்பு தொகு

இக்கோயில் பிற்காலப் பல்லவர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊரின் ஈசான்ய மூலையில் இக்கோயில் உள்ளது. இங்கிருந்த முற்காலச் சோழர் காலப் பஞ்சலோகக் கல்யாணசுந்தரேசுவரர் திருமேனி தற்போது திருமேனிகள் காப்பகத்தில் உள்ளது. மகாகணபதி இக்கோயிலில் உள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள் தொகு