வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்

சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று புறநானூற்றில் 125[1] எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, ஆகிய இருவருக்கும் இடையே நடந்த போரில் மலையமான் திருமுடிக் காரி சோழன் பக்கம் நின்று போரிட்டுச் சோழனுக்கு வெற்றியைத் தேடித் தந்தானாம். மலையமான் திருமுடிக் காரி தன் பக்கம் இருந்திருந்தால் தான் வெற்றி பெற்றிருக்கலாமே என்று சேரன் வருந்துவதாகப் பாடல் அமைந்துள்ளது.

உவமை: “உருத பகடு அழி தின்றாங்கு”

உழுத மாடு வைக்கோலைத் தின்பது போல மலையமானுக்குக் கிடைத்தது மிச்சம் மீதியே என்று புலவர் கூறும் உவமை சிறப்பாக உள்ளது.

பழஞ்சொல்: ‘கவர்பு’

இவர் கையாண்டுள்ள ’செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் பழந்தமிழ் நடையில் வரும் பாங்குகளில் ஒன்று.

வெளி இணைப்புகள் தொகு

  1. வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்