வடிக பட்டுன நடனம்

வடிக பட்டுன நடனம் சிங்களவர்களது கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியம் மிக்க நடனக் கலையாகும். இது இலங்கையின் தாழ்நில பிரதேசங்களுக்குரிய பாரம்பரிய நடனங்களின் தோற்றங்களிலொன்றாகும். உயர்நிலப் பிரதேசங்களில் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக கண்டிய நடனம் விளங்குவதைப் போல தாழ்நிலப் பிரதேசங்களுக்குரிய சிங்கள மக்கள் மத்தியில் இந்த வடிக பட்டுன நடனம் விளங்குகிறது.

இது கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த அரசிக்கு வைத்தியம் செய்வதற்காக வடிகே நாட்டிலிருந்து வந்த சில பிராமணர்களின் வருகையினைக் கதையாகச் சொல்கிறது. வசனங்களும் உரையால்களும் பாளி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் காணப்படுகின்றன.

கண்டிய நடனத்தைவிட இது வித்தியாசமானது. கண்டி நடனம் அங்க அசைவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும். இந்நடனத்தில் அபிநயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும். இன்று தென்மாகாணத்தில் இடம்பெறக்கூடிய கலாசார நிகழ்ச்சிகளின்போதும் பெரஹர ஊர்வலத்தின்போதும் இது முக்கியத்துவம் பெற்ற ஒரு பாரம்பரிய நடனக் கலையாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இந்நடன நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சிங்கள மக்களே பங்கேற்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிக_பட்டுன_நடனம்&oldid=680193" இலிருந்து மீள்விக்கப்பட்டது