வடிவமைப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு

வடிவமைப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Examination for Design) அல்லது இதன் ஆங்கிலப் பெயரின் முதற்சொல் சுருக்கமான சீடு (CEED)[1]இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் இந்திய அறிவியல் கழகத்திலும்) தொழில்நுட்ப வடிவமைப்பிற்கான பட்ட மேல்படிப்புக்களில் சேர்க்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் இணைந்து நடத்தப்பெறும் நுழைவுத் தேர்வாகும். இந்த நுழைவுத் தேர்வை இந்திய அரசின் மனிதவள அமைச்சின் சார்பாக இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையின் தொழிலக வடிவமைப்பு மையம் ஏற்று நடத்துகிறது. தயாரிக்கும் பொருளின் வடிவமைப்பு, தொழிற்சாலை வடிவமைப்பு, கட்புலத் தொடர்பியல், அசைபடம், வாகன வடிவமைப்பு குறித்த கல்வித்திட்டங்களுக்கு சேர்வதற்கான மாணவர்களின் ஏரண, புனைவு, ஓவிய மற்றும் கவனிப்புத் திறன்கள் இத்தேர்வில் சோதிக்கப்படுகின்றன.

சீடு2012 சுவரொட்டி

சான்றுகோள்கள்

தொகு
  1. About CEED Industrial Design Centre, IITB

வெளி இணைப்புகள்

தொகு