வட்டவிளை (Vattavilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. வட்டவிளை நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 41-ஆவது வார்டுக்கு உட்பட்டதாகும்.[1]

கோட்டவிளை, ஊரடிவிளை, மருதங்கோடு, முதலியவை வட்டவிளையின் அண்டை கிராமங்களில் சிலவாகும். வட்டவிளை பாகோடு பஞ்சாயத்தின் ஒரு பகுதியாகும். பாகோடு கிராம பஞ்சாயத்தின் அரைப் பகுதியாக 16 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த பகுதியாக வட்டவிளை உள்ளது. இதன் வட்ட (சுற்று) வடிவ அமைப்பின் காரணமாக இப்பகுதி வட்டவிளை என்ற பெயர் பெற்றது என அறியப்படுகிறது.

மக்கள்தொகை தொகு

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த பகுதியின் மக்கள் தொகை 4092 ஆகும்.

கோயில்கள் தொகு

இங்குள்ள ஆனதம் குளக் கரையில் உள்ள தொட்டதுமடத்தில் ஒரு கிருட்டிணன் கோயில் உள்ளது. அங்கு கிராமத்தின் மையத்தில் ஒரு தேவி (பத்ரகாளி) கோயிலும் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. மலர், மாலை (2022-11-07). "வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டவிளை&oldid=3725272" இலிருந்து மீள்விக்கப்பட்டது