வட்டு-கால் வெளவால்
வட்டு-கால் வெளவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | கைராப்பிடிரா
|
குடும்பம்: | வெசுபெர்டிலினோனிடே
|
பேரினம்: | யூடிசுகோபசு
|
இனம்: | யூ. டென்டிகுலசு
|
இருசொற் பெயரீடு | |
யூடிசுகோபசு டென்டிகுலசு ஓசுகுட், 1932 |
வட்டு-கால் வெளவால் (Disk-footed bat)(யூடிசுகோபசு டென்டிகுலசு) என்பது லாவோஸ் மற்றும் மியான்மரில் காணப்படும் வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தில் உள்ள வெசுபர் வெளவாலின் ஒரு சிற்றினமாகும். அண்மையில் இந்த வெளவால் சீனாவில் யுனான் மாகாணத்தில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[2] தற்பொழுது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகலாயாவில் வட்டு கால் வெளவால் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இது இதன் இயற்கை வாழிடத்திலிருந்து (மியான்மர்) சுமார் 1000 கிலோ மீட்டருக்கு வெளியே மேற்குப்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் முதன் முதலிக் கண்டுப்பிடிக்கப்பட்ட வட்டு-கால் வெளவால் ஆகும்.[3]
ஆதாரங்கள்
தொகு- ↑ Soisook, P.; Csorba, G.; Bumrungsri, S.; Francis, C.M.; Bates, P.; Kingston, T. (2016). "Eudiscopus denticulus". IUCN Red List of Threatened Species 2016: e.T8168A22028419. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T8168A22028419.en. https://www.iucnredlist.org/species/8168/22028419.
- ↑ Wenhua Yu et al. "First record of disk-footed bat Eudiscopus denticulus (Chiroptera, Vespertilionidae) from China and resolution of phylogenetic position of the genus". 动物学研究 42(1): 94-99. https://www.researchgate.net/publication/348412924_First_record_of_disk-footed_bat_Eudiscopus_denticulus_Chiroptera_Vespertilionidae_from_China_and_resolution_of_phylogenetic_position_of_the_genus.
- ↑ https://www.thehindu.com/news/national/other-states/meghalaya-records-indias-first-bat-with-sticky-disks/article34349748.ece