வணிகக் கடித உறை

வணிகக் கடித உறை (Commercial envelope) என்பது, கடித உறை வகைகளுள் ஒன்று. நீண்ட செவ்வக வடிவில் அமைந்திருக்கும் இது வழமையான வணிக வகை ஒட்டுதற்குரிய மூடியையும், மூலைவிட்டப் பொருத்தையும் கொண்டிருப்பது உண்டு. இவ்வகை உறைகள் சில செங்கோண வடிவ மூடியையோ அல்லது கூர் முனை மூடியையோ கொண்டிருப்பதும் உண்டு. அத்துடன், பக்கப் பொருத்துக்களைக் கொண்ட வணிக வகை உறைகளும் உள்ளன. இதன் மூடி உறையின் நீளப் பக்கத்தில் அமைந்திருக்கும்.

பொதுவான வணிகக் கடித உறை ஒன்றைக் காட்டும் படம்

இவ்வுறைகள் பொதுவாக வணிகக் கடிதத் தொடர்புகளுக்கும், தனிப்பட்ட கடிதத் தொடர்புகளுக்கும் பயன்படுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு சாளரங்களைக் கொண்டவையாகவும் உற்பத்தி செய்யப்படுவது உண்டு. இவற்றுட் பெரும்பாலானவற்றின் மேல் மூடியின் ஓரத்தில் ஈரமாக்கி ஒட்டத்தக்க வகையில் பிசின் பூசி உலர்த்தப்பட்டிருக்கும். தற்காலத்தில், இது தவிர உரித்துவிட்டு ஒட்டக்கூடிய வகையில் ஒட்டுபொருட்கள் பூசப்பட்டு, இன்னொரு ஒடுங்கிய தாள் பட்டியினால் மூடப்பட்டிருக்கும் மூடிகளுடன்கூடிய உறைகளும், தானே ஒட்டக்கூடிய ஒட்டுபொருள்கள் தடவப்பட்ட உறைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வகைக் கடித உறைகள் பல அளவுகளிலும், அளவு விகிதங்களைக் கொண்டனவாகவும் விற்பனைக்கு உள்ளன. இவ்வேறுபாடுகள் அவற்றுக்குக் கொடுபட்டுள்ள எண்கள் அல்லது பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள், #5, #6, #6 1/4, #6 1/2, #6 3/4, #7, #7 1/2, #7 3/4, மொனார்க், செக், #9, #10, #10 1/2, #11, #12, #14, #16 என்பனவும் அடங்கும்.

வணிகக் கடித உறை வகைகளும் அளவுகளும்

தொகு
 
வணிகக் கடித உறை வகைகளின் அளவுகள் ஒப்பீடு
பெயர் உறை அளவு
(அங்குலம்)
மிகப்பெரிய
உள்ளடக்க அளவு
#5 5.5 x 3.0625 5.25 x 2.8125
#6 6 x 3.375 5.75 x 3.125
#6 ¼ 6 x 3.5 5.75 x 3.25
#6 ½ 6.25 x 3.5625 6 x 3.3125
#6 ¾ 6.5 x 3.625 6.25 x 3.5
#7 6.75 x 3.75 6.5 x 3.5
#7 ½ 7.625 x 3.75 7.375 x 3.5
#7 ¾ / மொனார்க் 7.5 x 3.875 7.25 x 3.75
செக் 8.625 x 3.625 8.375 x 3.5
#9 8.875 x 3.875 8.625 x 3.75
#10 9.5 x 4.125 9.25 x 3.875
#11 10.375 x 4.5 10.125 x 4.25
#12 11 x 4.75 10.75 x 4.5
#14 11.5 x 5 11.25 x 4.75
#16 12 x 6 11.75 x 5.75

மேல் தரப்பட்டுள்ள அளவுகள் அனைத்தும் அங்குலத்தில் உள்ளன. இவை ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அளவுகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகக்_கடித_உறை&oldid=3979104" இலிருந்து மீள்விக்கப்பட்டது