வணிகச்சுழல்

வணிகச்சுழல் என்பது, நீண்டகால வளர்ச்சிப் போக்குகள் தொடர்பான பொருளியல் செயற்பாடுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. இச் சுழல், மாறிமாறி ஏற்படும் ஒப்பீட்டளவில் விரைவான வளர்ச்சிகளையும், ஒப்பீட்டளவிலான மந்தநிலை அல்லது இறங்குநிலைகளையும் உள்ளடக்கியிருக்கும். இவ்வாறான ஏற்ற இறக்கங்கள் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியளவைக் கொண்டு அளக்கப்படுகின்றன. இச் சுழலில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சிநிலை, மந்தநிலை ஆகியவை தொடர்பான ஏற்ற இறக்கங்கள், ஒரு இயந்திரத்தனமான அல்லது எதிர்வு கூறத்தக்க கால இடைவெளிகளில் ஏற்படுவதில்லை.

வணிகச்சுழல் வகைகள் தொகு

ஒழுங்கான கால இடைவெளிகளில் ஏற்படுவதாகக் கருதப்படும் ஏற்ற இறக்கங்கள் தொடர்பாகப் பல வகையான வணிகச் சுழல்கள் பற்றிய கருத்துக்களை அறிஞர் பலர் முன்வைத்துள்ளனர். முக்கியமான பல வணிகச்சுழல் வகைகள் அவற்றை முன்மொழிந்தவர்களுடைய பெயர்களினாலேயே அழைக்கப்படுகின்றன.

  1. கிச்சின் சரக்குச் சுழல் (Kitchin inventory cycle) - 3-5 ஆண்டுகள் - ஜோசப் கிச்சின் என்பவரால் முன்மொழியப்பட்டது.
  2. ஜக்ளர் நிலைத்த முதலீட்டுச் சுழல் (Juglar fixed investment cycle) - 7-11 ஆண்டுகள் - கிளமெண்ட் ஜக்ளர் என்பவரால் முன்மொழியப்பட்டது.
  3. குஸ்நெட்ஸ் உட்கட்டுமான முதலீட்டுச் சுழல். - 15-25 ஆண்டுகள் - நோபல் பரிசு பெற்ற சிமொன் குஸ்நெட்ஸ் என்பவரால் முன்மொழியப்பட்டது.
  4. காண்ட்ராட்டியெவ் அலை - 45-60 ஆண்டுகள் - நிக்கோலாய் காண்ட்ராட்டியெவ் என்பவரால் முன்மொழியப்பட்டது.
  5. பொரெஸ்டர் சுழல் - 200 ஆண்டுகள் - ஜே ரைட் பொரெஸ்டர் என்பவரின் பெயரைத் தழுவியது.டொஃப்லர் நாகரிகச் சுழல் - 1000-2000 ஆண்டுகள் - அல்வின் டொஃப்லர் என்பவரின் பெயரைத் தழுவியது.

மரபுசார்ந்த வணிகச்சுழல்கள் தொடர்பான ஆர்வம் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வலுவாக இருந்தது. எனினும், ஒழுங்கான காலச் சுழல்கள் இருப்பதை ஆதரிக்காத தற்கால பருப்பொருளியலின் வளர்ச்சிக்குப் பின்னர், இதன் மேலிருந்த ஆர்வம் குறைந்துவிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகச்சுழல்&oldid=1352140" இலிருந்து மீள்விக்கப்பட்டது