வண்ணம் (யாப்பருங்கல நெறி)
தொல்காப்பியர் 20 வகை வண்ணங்களைக் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் என்னும் நூலின் விருத்தியுரையில் பாடல்களில் காணப்படும் வண்ணங்கள் மேற்கோள் பாடல்களுடன் விளக்கப்பட்டுள்ளன. [1]
வண்ணம் - எடுத்துக்காட்டுடன்
தொகு1
தொகு- உயிர் மிக்கு வந்த வண்ணம்
- ஐயாவோ ஐயாவோ எய்யாயோ எய்யாயோ
- கையாயோ ஐய களிறு
- ஐயா! களிற்றை எய்யமாட்டாயா
2
தொகு- மெய் மிக்கு வந்த வண்ணம்
- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
- பற்றுக பற்று விடற்கு
3
தொகு- உயிர்மெய் மிக்கு வந்த வண்ணம்
- படைகுடி கூழ்அமைச்சு நட்புஅறன் ஆறும்
- உடையான் அரசருள் ஏறு
4
தொகு- குறிலெழுத்து மிக்கு வந்த வண்ணம்
- கற்க கசடறக் கற்பவை கற்றபின்
- நிற்க அதற்குத் தக
5
தொகு- நெடில் எழுத்து மிக்கு வந்த வண்ணம்
- யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
- சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு
6
தொகுஅளபெடை பெற்று வந்த வண்ணம்
- ஏஎர் சிதைய அழாஅல் எலாஅநின்
- சேயரி சிந்திய கண்
7
தொகு
- வல்லினம் மிக்கு வந்த வண்ணம்
- தெறுக தெறுக தெறுபகை தெற்றால்
- பெறுக பெறுக பிறப்பு
8
தொகு- மெல்லெழுத்து மிக்கு வந்த வண்ணம்
- மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
- காடும் உடையது அரண்
9
தொகு- இடையெழுத்து மிக்கு வந்த வண்ணம்
- வயல்உழுவார் வாழ்வாருள் வாழ்வார் அயல்உழுவார்
- வாழ்வாருள் வாழா தவர்
10
தொகு- குற்றியலுகரம் மிக்கு வந்த வண்ணம்
- குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது
- கருப்புச் செறுப்புப் பரப்பு
- கரும்பின் குருத்தை வெட்டி எறிந்துவிட்டு
- வயலில் பரப்பு
11
தொகு- குற்றியலிகரம் வந்த வண்ணம்
- குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
- மழலைச்சொல் கேளாத வர்
- சிலையன் செழுந்தழையன் சென்மியா என்று
- மலையகலான் மாடே வரும்
அவன் தழையாடையுடன் வருகிறான்
12
தொகு- ஆய்த வண்ணம்
- அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
- வெஃகி வெறிய செயின்
13
தொகு- ஐகாரக்குறுக்க வண்ணம்
- படுமழைத் தண்மலை வெற்பன் உறையும்
- நெடுந்தகையைக் கண்டதாம் நாள்
- வெற்பனை ஒருநாள் பார்த்தேன்
14
தொகு- ஔகாரக் குறுக்க வண்ணம்
- நௌவிமான் நோக்கினார் அவ்வாய் மணிமுறுவல்
- வௌவாதார் கௌவை இலர் [2]
- ஔவித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
- தௌவையைக் காட்டி விடும்
15
தொகு- மகரக் குறுக்க வண்ணம்
- தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
- தம்தம் வினையான் வரும்
- தாம்வீழ்வார் தம்வீழப் பெறவர் பெற்றாரே
- காமத்துக் காழில் கனி [3]