வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்
(வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் யாழ்நகரில் வைத்தியசாலையின் கிழக்குப் பக்கமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முதலாவது கொடியேற்றம் 1878 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆலய மணிக்கோபுரம் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. [1]ஆலயத்தில் கிழக்கு வீதியில் உள்ள லக்ஷ்மி நாராயணன் கல்யாண மண்டபம் 2000-ஆம் ஆண்டளவில் அன்றைய ஆலய அறங்காவலர் சிவலோகநாதன் தலைமையில் கட்டப்பட்டு பாலசிங்கம் அவர்களால் 26 ஆகஸ்டு 2000-இல் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. [2]. இந்த ஆலயத்தின் இரண்டாவது கோபுரம் 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 2003-ஆம் ஆண்டில் புனருத்தாரணம் செய்யப்பட்டது. ஆலயத்தின் தேரடியில் உள்ள அனுமார் விக்கிரகம் 2003-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. [3]
வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°40′16.65″N 80°0′55.17″E / 9.6712917°N 80.0153250°E |
பெயர் | |
பெயர்: | வரதராஜ பெருமாள் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடமாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
அமைவு: | யாழ்ப்பாணம், யாழ் பொது வைத்திய சாலைக்கு அருகில் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விஷ்ணு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
உசாத்துணைகள்
தொகு- ↑ "முன்னாள் ஆலய அறங்காவலரிடம் இருந்து ஆலயத்தின் உருவாக்கம் பற்றிய சிறுகுறிப்பு". Archived from the original on 2013-01-06. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
- ↑ "முன்னாள் ஆலய அறங்காவலரிடம் சிவலோகநாதனிடம் இருந்து கல்யாண மண்டபம் பற்றிய குறிப்புக்கள்". Archived from the original on 2012-12-11. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
- ↑ "முன்னாள் ஆலய அறங்காவலர் சிவலோகநாதனிடம் இருந்தான சிறுகுறிப்புக்கள்". Archived from the original on 2016-10-16. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.