வத்ரேவு சின்ன வீரபத்ருடு

வத்ரேவு சின்ன வீரபத்ருடு [பிறப்பு: 28 மார்ச் 1962] ஆந்திராவைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருதினை வென்றவர் ஆவார்.[1] இவர் ஐந்து கவிதை நூல்கள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இமானுவேல் காண்டின் தத்துவங்கள் மொழிபெயர்ப்பு, அப்துல்கலாமின் ஐந்து புத்தகங்கள் மொழிபெயர்ப்பு மற்றும் மூன்று காந்திய நூல்கள் மொழிபெயர்ப்பு ஆகியவற்றைச் செய்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பழங்குடி கிராமத்தில் பிறாந்தார். 1985 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் ராஜமுந்திரியில் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றினார். 1987-இல் ஆந்திரப் பிரதேச அரசின் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றினார். விஜயநகரம், கர்னூல், விசாகப்பட்டினர் மற்றும் அதிலாபாத் ஆகிய மாவட்டங்களில் 1987 முதல் 1995 வரை பழங்குடியினர் நல்வாழ்வுத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டு நிறுவனத்தின் (ITDA) திட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். பழங்குடியினர் நல்வாழ்வுத்துறையில் இணை இயக்குனராக 2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை பணியாற்றினார். பின்னர் 2016 வரை கூடுதல் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1987 முதல் 2016 வரை இத்துறையில் பணியாற்றிய காலத்தில், பழங்குடியினர் கல்வி மேம்பாடு, பழங்குடியினர் பகுதிகளில் தொடக்கக் கல்வியைப் பரவலாக்குதல், பழங்குடியினரின் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், பழங்குடியினர் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் பழங்குடியினரின் துணைத் திட்டம் மற்றும் பிறவற்றை உருவாக்குதல் மற்றும் கண்காணித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.

படைப்புகள்

தொகு
  • யாரையும் சங்கடப்படுத்தாதீர்கள் (மொழிபெயர்ப்பு) (ఎవరికీ తలవంచకు (అనువాదం))
  • வெற்றிபெறும் சுயசரிதை (ஏபிஜே அப்துல் கலாமின் தெலுங்கு மொழிபெயர்ப்பு 'தி விங்ஸ் ஆஃப் ஃபயர்)(ఒక విజేత ఆత్మ‌క‌థ ( ఎపిజె అబ్దుల్ కలాం 'ది వింగ్స్ ఆఫ్ ఫైర్' తెలుగుఅనువాదం))
  • தனிமையான களத்தில் எங்கள் அம்மா மட்டும்தான் (கவிதை தொகுப்பு) (ఒంటరి చేలమధ్య ఒకత్తే మన అమ్మ (కవితా సంకలనం))
  • சில குறிப்புகள் சில திறன்கள் - உலகளாவிய கல்வியில் எனது அனுபவங்கள் (కొన్నికలలు కొన్నిమెలకువలు - సార్వత్రిక విద్యలో నా అనుభవాలు)
  • ஜெர்மன் தத்துவஞானி கான்ட்டின் படைப்புகள் (மொழிபெயர்ப்பு) (జర్మన్ తత్త్వవేత్త కాంట్ రచనలు (అనువాదం))
  • மை கன்ட்ரி யங் பீப்பிள் (ஏபிஜே அப்துல் கலாம் 'இக்னிட்டட் மைண்ட்ஸ்' தெலுங்கு மொழிபெயர்ப்பு) (నా దేశ యువజనులరా (ఎపిజె అబ్దుల్ కలాం 'ఇగ్నైటెడ్ మైండ్స్' తెలుగు అనువాదం))
  • நிர்விகல்பா இசை (கவிதை தொகுப்பு) (నిర్వికల్ప సంగీతం (కవితా సంకలనం))
  • வாட்டர்கலர் படம் (నీటిరంగుల చిత్రం)
  • நான் செல்லும் பாதைகள் ஆறுகள், காடுகள், மலைகள் (నేను తిరిగిన దారులు నదీనదాలు, అడవులు, కొండలు)
  • மறுபரிசீலனை (கவிதை)(పునర్యానం (కావ్యం))
  • கேள்வித்தாள் (கதை தொகுப்பு) (ప్రశ్నభూమి (కథా సంకలనం))
  • வீட்டில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? (మీరు ఇంటి నుంచి ఏమి నేర్చుకోవాలి?)
  • பள்ளியில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? (మీరు బడి నుంచి ఏమి నేర్చుకోవాలి?)
  • சமூகத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? (మీరు సమాజం నుంచి ఏమి నేర్చుకోవాలి?)
  • நூறு வருட தெலுங்கு கதை (தொகுப்பு) (వందేళ్ల తెలుగుకథ(సంకలనం))
  • உண்மை தேடுதல் (సత్యాన్వేషణ)
  • நண்பருக்கு காதல் கடிதம் (இலக்கியப் புகழ்ச்சி)(సహృదయునికి ప్రేమలేఖ (సాహిత్య ప్రశంస))
  • ஹைக்கூ பயணம் (హైకూ యాత్ర)


விருதுகள்

தொகு
  • 2008 ஆம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பாளர்களுக்கான சாகித்ய அகெதமி விருது.
  • தெலுங்கு பல்கலைக்கழக விருது.[2]

மேற்கோள்கள்

தொகு