வனத்துறைப் பணியாளர்

வனத்துறைப் பணியாளர் (Forest range officer) என்பவர் மாநில அரசாங்கத்தில் ஒரு மாநில வன சேவையின் அதிகாரியாவார். சில மாநிலங்களில், இவர்கள் "வன வரம்பு அதிகாரி" என்றும், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வனப்பாதுகாவலர், வனப்பாதுகாவலர் , உதவி வனப்பாதுகாவலர் , மாவட்ட வன அதிகாரி, வனச்சரக அதிகாரி அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பரிந்துரைக்கப்பட்ட காக்கி சீருடையை அணிவார்கள். அதில் 3 மூன்று (ஐந்து புள்ளிகள்) நட்சத்திரங்கள் தோளில் கோடுகள் இல்லாமல் இருக்கும். பணியாளர்கள், வனவர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் [1] எனவும் அறியப்படுகின்றனர்.[2]

தேர்வு முறைகள்

தொகு

உயர் பணியில் நியமிக்கப்படும் அதிகாரிகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும் நேரடியாக இந்திய வனப்பணியீலும்  மாநில வனப்பணியில் உதவி வனப்பாதுகாவலர்கள், வனச்சரகர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பணிஅயாளர்களான வனவர் வன காப்பாளர் வனக்காவலர் ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக்கு தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்வுசெய்யப்பட்டு வந்தனர். தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (காவல்துறை தீயணைப்புத் துறையினர் போல்) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வனவர் பணிக்கு இளங்கலை அறிவியியல் அல்லது இளங்களை பொறீயியல் பட்டமும் வன காப்பாளர் பதவிக்கு பனிரண்டாம் வகுப்பும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு 30 இருக்கவேண்டும். வனவர் பணிக்கு எழுத்துத் தேர்வுஉடல் தகுதித் திறன் நேர்முகத் தேர்வு ஆகியவையும் வன காப்பாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் திறன் தேர்வு லமும் தேர்வு செய்யப்படுகிறது

பொறுப்புகள்

தொகு

வனத்தைப் பாதுகாத்தல், வனத்தின் சுற்றுச்சூழலைக் கண்காணித்தல், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்களை நெறிப்படுத்துதல் வனவருடைய பணிகளாகும் இந்த வேலையில் சேருவதற்கு உடல் தகுதியும் படிப்புத் தகுதியும் இருக்க வேண்டும். உடல்தகுதியாக 160 செமீ உயரம் இருக்கவேண்டும். இவர்கள் தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வில் அதிக மதி்ப்பெண் எடுக்க வேண்டும். இவர்கள் 5 மணி நேரத்தில் 25 கிமீ கடக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வனச்சரக அழுவலர்கள் வனக் கல்விக் கூடத்தில் வனவியல் கல்வி கற்பிக்கப்படுகிறது .பயிற்சிகாலம் 18 மாதங்கள் இதில் வனம் மற்றும் வேளாண்மை சம்பதப்பட்ட 35 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பயிற்சிக்காலங்களில் சம்பளம் வழங்கப்படும்

சான்றுகள்

தொகு
  1. http://www.forests.tn.nic.in/Administration/organizational_structure.html
  2. http://www.viduthalai.in/page1/38845.html பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனத்துறைப்_பணியாளர்&oldid=3600916" இலிருந்து மீள்விக்கப்பட்டது