வனத்தோட்ட வளர்ப்பு முறை
வனத்தோட்ட வளர்ப்பு முறை (Forest gardening) அடுக்குமுறை சாகுபடி, அல்லது அடிசில் சோலைகள் என்பது பொதுவாக வேளாண்காடு வளர்ப்பு முறையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு விவசாயப் பண்ணை போல் மரங்கள், மூலிகைகள், காய், மற்றும் கனி போன்றவற்றைக் கொடுக்கும் தாவரங்கள் போன்றவற்றை ஒரே சூழலில் வளர்க்கும் முறை ஆகும். இதன் மூலம் அதிகச் செலவுகள் செய்ய வேண்டியது இல்லை. ஒரு தாவரத்தின் துணையுடன் மற்ற தாவரங்களும் பெரிய அளவில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். அதோடு பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் பாதுகாப்பு மண்டலமாக இவை மாறுகின்றன. இம்முறையில் துணை நடவை பயன்படுத்துகிறார்கள்.[1]
வனத் தோட்ட வளர்ப்பு முறையானது வெப்பமண்டல காலநிலையில் பழங்காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். 1980 ஆம் ஆண்டுகளில் மித வெப்ப மண்டல காடுகளிலும் இந்த வகை சாகுபடி முறையை ராபர்ட் ஹார்ட் என்பவர் புகுத்தினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
- ↑ Crawford, Martin (2010). Creating a Forest Garden. Green Books. p. 18.