வன்னியூர்க் கவிராயர்

வன்னியூர்க் கவிராயர் எனும் புனைபெயரைக்கொண்ட எம். எவ். சௌந்தரநாயகம் ஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவராவார். கவிதைகள் மற்றும் சிறுகதைகளை[1] எழுதிப் புகழ்பெற்றார். இவரது சொந்த ஊர் செட்டிக்குளமாகும். வன்னியூர் கவிராயர் அவர்கள் கிறித்தவராகப் பிறந்து கிறித்தவப் பாடசாலையிலேயே தமது கல்வியைத் தொடர்ந்த ஒருவர் எனினும் அவரின் ஆக்கங்களில் வேறுமதத் தாக்கங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவரின் கவிதைகளில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சிறுமையைக் கண்டு சினம் கொள்ளல் மற்றும் சாதி, மதம், இனம், மொழி, மாவட்டம், பிரதேசம் போன்ற பிரிவுகள் மூலம் உயர்வு தாழ்வு பாராட்டாத ஒரு சமூக அமைப்பு, மறுமலர்ச்சி போன்ற பல பண்புகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர் 1978ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "வன்னியூர்க் கவிராயரின் புகழ்பெற்ற சவால் சிறுகதை, புதுவசந்தத்தில்". சிறுகதை. தேசிய கலை இலக்கியப் பேரவை. 1999. pp. 67–69. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2015.
  2. "1978 ஆம் ஆண்டில் இவர் இறைவனடி சேர்ந்தார் எனும் குறிப்பு முதலமைச்சர் உரையில்". பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னியூர்க்_கவிராயர்&oldid=1978341" இலிருந்து மீள்விக்கப்பட்டது