வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது

வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது (violence begets violence) என்பது அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும். "வயலன்சு பிகெற்சு வயலன்சு" என்ற சொற்தொடரை மார்ட்டின் லூதர் கிங் 1950களில் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்தினார். இந்தக் கருத்துரு அவரதும் மகாத்மா காந்தி போன்ற பல்வேறு அறவழிப் போராட்டத் கோட்பாட்டாளர்களினதும் முதன்மை வாதங்களில் ஒன்றாகும்.

அவன் கனவு கண்டதைவிடை இது அதிக தூரம் சுடுகிறது
(யோன் எப். நொட், மார்ச்சு 1918)

மார்ட்டின் லூதர் கிங் தொகு

 

"வன்முறையின் முதன்மையான பலவீனம் என்பது அது ஒர் இறங்குமுக சுருள். எதை அழிக்க முனைகிறதோ அதையே பெற்றுக்கொள்கிறது. தீயதைக் குறைப்பதை விடுத்து அது பெருக்கிறது. வன்முறையால் பொய் சொல்பவரைக் கொல்லலாம், ஆனால் பொய்யைக் கொல்ல முடியாது, உண்மையை நிரூபிக்க முடியாது. வன்முறையால் வெறுப்பவரைக் கொல்லாம், ஆனால் வெறுப்பைக் கொல்ல முடியாது. மாற்றாக, வன்முறை வெறுப்பை அதிகரிக்கிறது. வன்முறையை வன்முறையால் பதிலளிப்பது வன்முறையை பெருக்கி, ஏற்கனவே விண்மீன்கள் அற்று இருக்கும் இரவை மேலும் இருட்டாக்கும். இருளை இருளால் அகற்ற முடியாது, ஒளியாலேயே முடியும். வெற்றுப்பால் வெறுப்பை அகற்ற முடியாது, அன்பாலேயே முடியும்."[1]

மேலும் அவர் தனது நோபல் பரிசுப் பேச்சில் பின்வருமாறு கூறுகிறார்:

"வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும் ஒர் இறங்குமுக சுருள். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. குமுகத்தை அழிக்கிறது. சகோதரத்துவத்தை ஏலாமல் செய்கிறது. சமூகத்தை உரையாடலில் அல்லாமல் தன்னுரையில் விடுகிறது. தப்பிப்பிழைத்தவர்களிடம் கசப்புத்தன்மையையும் அழித்தவர்களிடம் கொடூரத்தையும் உருவாக்கின்றது."[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Descending spiral of violence" இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130616171122/http://www.wildnesswithin.com/mlk/mlk.html. 
  2. The Quest for Peace and Justice