வய் (wái) என்பது ஒரு கண்டோனீசு மொழி சொல்லாகும். இச்சொல்லுக்கு இணையான தமிழ் சொல் இல்லை. இருப்பினும் இச்சொல்லுக்கு இணையான பயன்பாடாக "Hello" எனும் ஆங்கிலச் சொல்லே தமிழர் பயன்பாட்டில் உள்ளது. தமிழர் மட்டுமன்றி உலகின் அதிகமான மொழியினரின் பயன்பாட்டிலும் "Hello" எனும் சொல் தான் பயன்படுகிறது. அதேவேளை ஹொங்கொங் வாழ் கண்டோனிசு மொழி பேசும் ஹொங்கொங் மக்களின் பயன்பாட்டில் பயன்படும் இந்த "வய்" எனும் சொல் ஒரு தனித்துவமானச் சொல்லாகப் பயன்படுவது ஒரு சிறப்பம்சமாகும். குறிப்பாக நகர்பேசி மற்றும் தொலைபேசி அழைப்பின் போது ஹலோ என்பதற்கு இணையாக "வய்" எனும் சொல்லே இம்மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.

அதேவேளை ஹொங்கொங் கண்டோனிசு மொழி பேசும் மக்களைத் தவிர, ஹொங்கொங் வாழும் ஏனைய சமுகத்தினரின் பேச்சு வழக்கிலும் இச்சொல் அடிக்கடி பயன்படுவதும் உண்டு. தமிழரில் சிலரும் பேச்சு வழக்கின் போது, குறிப்பாக அழைப்பேசி அழைப்பின் போது "வய்" என்று அழைத்து பழக்கப்பட்டோரும் உளர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வய்&oldid=2139194" இலிருந்து மீள்விக்கப்பட்டது