வரதராஜன் ஜெயபாஸ்கரன்

வரதராஜன் ஜெயபாஸ்கரன் (பிறப்பு: சூன் 15, 1960) என்பவர் கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் ஆவார். இவர் மக்கள் வாழ்க்கையைச் சார்ந்த கவிதைகளை எழுதுபவர் ஆவார்.

வரதராஜன் ஜெயபாஸ்கரன்
பிறப்புவரதராஜன் ஜெயபாஸ்கரன்
காட்டுப்பாக்கம், காஞ்சிபுர மாவட்டம், தமிழ்நாடு[1]
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஜெயசூரியன்
படித்த கல்வி நிறுவனங்கள்உத்திரமேரூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி
அறியப்படுவதுகவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்
பெற்றோர்கா. மு. வரதராஜன்
வரதம்மாள்

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கைதொகு

கா. மு. வரதராஜன் - வரதம்மாள் இணையருக்கு சூன் 15, 1960இல் காட்டுப்பாக்கம் என்னும் ஊரில் பிறந்தவர்.[1]

சிறப்புகள்தொகு

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக இவர் உள்ளார்.[2] இவர் 1986 முதல் 1988 வரை தேவி வார இதழில் நிருபராகப் பணியாற்றினார். ஜெயபாஸ்கரன், ஜெயசூரியன் என்னும் பெயர்களில் 50 கட்டுரைகளை எழுதியுள்ளார். 1989 முதல் 1991 வரை தராசு வார இதழில் சமுகப் புலனாய்வு நிருபராகப் பணியாற்றினார். இவர் 18 சிறப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 ஆர். சி. ஜெயந்தன் (2009 ஆகத்து 1). ""மேம்படவும் மேம்படுத்தவும் ஏதுவாக இருப்பதே கவிதை! கவிஞர் ஜெயபாஸ்கரன் நேர்காணல்". நக்கீரன். பார்த்த நாள் 2015 நவம்பர் 3.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "நூல்கள் வெளியீட்டு விழா". தினமணி (2012 செப்டம்பர் 20). பார்த்த நாள் 2015 நவம்பர் 3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரதராஜன்_ஜெயபாஸ்கரன்&oldid=3227968" இருந்து மீள்விக்கப்பட்டது