வரதராஜ பெருமாள் கோவில், சூளகிரி
வரதராஜ பெருமாள் கோவில்,சூளகிரி (Varadaraja Perumal Temple, Shoolagiri) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள பழமையான விஷ்ணு கோவில் ஆகும்.[1][2][3][4][5] இதன் கர்ப்பக்கிரகம் பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது. இகோவிலின் மண்டபம் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பின்னர் ஹொய்சால மன்னர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்டது.
வரதராஜ பெருமாள் கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | வரதராஜ பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருட்டிணகிரி |
அமைவு: | சூளகிரி |
ஆள்கூறுகள்: | 12°39′50″N 78°00′43″E / 12.664°N 78.012°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரசன்ன வரதராஜ பெருமாள் (விஷ்ணு) பெருந்தேவி மகாலட்சுமி |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | துவாபர யுகம் |
அமைத்தவர்: | அருச்சுனன், பிற்காலச் சோழர், கிருஷ்ணதேவராயர், போசளர், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள். |
இணையதளம்: | http://srivaradarajaperumaltemple.wordpress.com |
விளக்கம்
தொகுசூளகிரி மலை திரிசூலத்தின் வடிவில் இருப்பதால் இந்த ஊர்சூளகிரி (சூலகிரி) என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு
தொகுஇக்கோவிலில் வரதராஜ பெருமாள் மேற்கு பார்த்துள்ளார். பெருந்தேவி மகாலட்சுமி தாயார் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உத்தராயண காலத்தில் (தை - ஆடி) சூரிய அஸ்தமனத்தின் போது சூரியக் கதிர்கள் பெருமாளின் காலடியில் விழுகிறது.
விழா
தொகுஒவ்வொரு ஆண்டும் மே 21, வரதராஜ பெருமாள் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது சிறப்பு பூஜைகள், யாகம் மற்றும் கல்யாண உற்சவம் போன்றவை அச்சமயத்தில் கோவிலில் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியின்போது கருடசேவை வெகு விமரிசையாக நடைபெறும்.
கோவில்நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ "Vararadaraja Perumal Temple - Dinamalar".
- ↑ "Shoolagiri Varadaraja perumal temple : Tamil".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Vararadaraja Perumal Temple of Shoolagiri : Tamil".
- ↑ "Vararadaraja Perumal Temple - Shoolagiri: Temples in Krishnagiri District: Tamil".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Old Temples in India". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.