வரலாற்றில் அறிவியல்

அறிவியலின் வரலாற்றைப் பற்றிய புத்தகம்

வரலாற்றில் அறிவியல் (Science in History) என்பது அறிவியலாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜான் டெசுமாண்டு பெர்னலின் நான்கு தொகுதிகளாக அமைந்த, 1954 இல் வெளியிடப்பட்ட அறிவியல் வரலாற்று நூலாகும். இது தான் வரலாற்றின் நெடுகிலும் நிலவிய அறிவியலும் சமூகமும் பற்றிய இருபுற ஊடாட்ட உறவுகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்குவதற்கு முயன்ற முதல் நூலாகும். இந்நூல் முதன்முதலாக ஜேம்சு வாட்சு எனும் பெயெர்பெற்ற அறிவியலாளரால் இலண்டனில் வெளியிடப்பட்டது. இந்நுல் 1969 ஆம் ஆண்டிற்குள் மூன்று பதிப்புகளைக் கண்டது. இது 1971 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தால் திருத்திய மறுபதிப்பாக வெளியிடப்பட்டதோடு தொடர்ந்து அச்சிடப்பட்டு வருகிறது.

இந்நூல் இடைக்காலக் கட்டத்தில் கிறித்துவ வரலாறு தட்டைப் புவி எனும் அறிவியலுக்கு முந்தைய தவறான கண்ணோட்டத்துக்கு வந்துவிட்ட தகவலைத் தருகிறது. இதைச் சில புத்தியல் வரலாறியலாளர்கள் மறுத்துள்ளனர்:

"இடைக்காலத்தில் தட்டைப் புவி, படிகநிலை வான்கோளங்கள் எனும் அறிவியலுக்கு முந்தைய தவறான கண்ணோட்டங்கள் மீண்டன, இக்காட்சி மரப்பொறிப்பு ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டு." - வரலாற்றில் அறிவியல், தொகுதி 1, அறிவியலின் எழுச்சி.

தொகுதிகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்றில்_அறிவியல்&oldid=3799981" இலிருந்து மீள்விக்கப்பட்டது