வரிகொடாப் போராட்டம்
வரி செலுத்த மறுத்தல்
வரிகொடாப் போராட்டம் அல்லது வரி எதிர்ப்பு (Tax resistance) என்பது ஒரு எதிர்ப்புப் போராட்ட வகை. வரி விதிக்கும் அமைப்பின் செயல்பாடுகள் மீதுள்ள அதிருப்தியினையும் எதிர்ப்பினையும் வெளிகாட்ட அதற்கு வரி கொடுக்க மறுப்பதே வரி எதிர்ப்பு. புற காரணங்களைத் தவிர வரி விதிப்பு நியாயமானதல்ல என்று கருதுபவர்களும், வரிப்பணம் செலவிடப்படும் விதத்தை விரும்பாதவர்களும் வரி எதிர்ப்பில் ஈடுபடுகின்றனர். வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த உத்தி பரவலாகப் பின்பற்று வந்துள்ளது. அமெரிக்கப் புரட்சி போன்ற ஆயுதப் போராட்டங்கள் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் போன்ற அமைதியான அறவழிப் போராட்டங்கள் வரை பல நிகழ்வுகளில் வரி எதிர்ப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.