வரிக்குதிரை

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு
வரிக்குதிரைகள்
Plains Zebra Equus quagga.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஒற்றைப்படைக் குளம்பி
குடும்பம்: குதிரைக் குடும்பம்
பேரினம்: குதிரைப் பேரினம்
துணைப்பேரினம்: Hippotigris and
Dolichohippus
இனம்

Equus zebra
Equus quagga
Equus grevyi
See here for subspecies.

வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.

வரிக்குதிரைகள் ஒரு சமூகவிலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன.[1] நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை. காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள்வரை உயிர் வாழும்.

வரிகள்தொகு

வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றினதைப்போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித் தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன் புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. ராதிகா ராமசாமி (1 செப்டம்பர் 2018). "அது ஒரு 'வரி' தழுவல் அல்ல!". கட்டுரை. இந்து தமிழ். 2 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்குதிரை&oldid=3618639" இருந்து மீள்விக்கப்பட்டது