வருணகுலாதித்தன் மடல்
வருணகுலாதித்தன் மடல், தமிழ் சிற்றிலக்கிய வகையான மடல் வகையைச் சேர்ந்த நூல். நூலின் காலம் 15-17ம் நூற்றாண்டு. பாடியவர் காளிமுத்தம்மை என்றும் அம்மைச்சி என்றும் அழைக்கப்படும் தாசி ஒருவர் எனச் சொல்லப்படுகிறது. காத்தான் என்னும் வருணகுலாதித்தன் மீது அகப்பொருட் சுவையுடன் பாடப்பட்டது. இது சமயம் சாரா சிற்றிலக்கியமாகும்.
தலைவன் தான் காதலித்த தலைவியை அடையாத போது, அவளை அடைய, பனங்கருக்கால் குதிரை வடிவில் ஊர்தி ஒன்றைச் செய்து ஊர்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சொல் நயம், அடுக்கு, எதுகை, மோனை, தொடை, நயம், முரண் தொடை, மடக்கு முதலிய அனைத்துச் செய்யுள் நலன்களும் இந்நூலில் காணக்கிடைக்கின்றன. சிறந்த சந்த நடையும், இலக்கிய நடையும், சில இடங்களில் பேச்சு நடையும் கொண்டுள்ளது.