வருணன் (திணைக் கடவுள்)
வருணன் என்பவன் தமிழர் வகுத்த திணைக் கடவுள்களில் நெய்தல் நிலத் தெய்வமாவான். வருணன் மேயும் நிலமாக பெருமணல் உலகத்தை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] சங்க இலக்கியங்களில் அதிகளவில் வருணன் பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும் சிலப்பதிகாரம் வருணனைக் கடல் தெய்வம் எனக் கூறுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ வருணன் மேய பெருமணல் உலகமும் - தொல்காப்பியம் அகத்திணையியல் 5
- ↑ `கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக்காட்டி அரியசூள் பொய்த்தார் அறனிலரென்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய (சிலம்பு - கானல்வரி -5) பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வத்தின் மலரடி வணங்குதும் - (சிலம்பு - கானல்வரி - 51)