வருண் சவுத்தரி
வருண் சவுத்தரி (Varun Chaudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முலானா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 ஆவது அரியானா சட்டமன்ற உறுப்பினராக அறியப்படுகிறார்.[1] [2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார்.[1]
வருண் சௌத்தரி Varun Chaudhary | |
---|---|
அரியானா சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 2019 | |
முன்னையவர் | சந்தோசு சௌகான் சர்வான் |
தொகுதி | முலானா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1979/1980 (அகவை 44–45)[1] |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
வாழிடம் | அம்பாலா, அரியானா, இந்தியா |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம், (இளங்கலைச் சட்டம், 2006) |
தொழில் | வழக்கறிஞர் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர் பூல் சந்து முல்லானாவுக்கு மகனாக சௌத்தரி பிறந்தார். இவர் அரியானாவின் அம்பாலா நகரைச் சேர்ந்தவர்.[1] 2006 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தின் கேம்பசு லா மையத்தில் இளங்கலை சட்டப் படிப்பை முடித்தார். வருண் சௌத்தரி தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.[1]
அரசியல் வாழ்க்கை
தொகு2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டப் பேரவைத் தேர்தலில், சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக முலானாவை பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளராகப் போட்டியிட்டார். பாரதிய சனதா கட்சியின் ராச்சுபீர் சிங்கை 1,688 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சந்தோசு சௌகான் சர்வானுக்குப் பின் வெற்றி பெற்றார்.[2] [3]
2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் மாநில சட்டசபைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக சௌவுத்ரிக்கு 'சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருது' வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Varun Chaudhary(Indian National Congress(INC)):Constituency- Mullana (SC) (Ambala) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
- ↑ 2.0 2.1 "Mulana Election Results 2019 Live Updates (मुलाना): Varun Chaudhary of Congress Wins" (in en). News18. 24 October 2019. https://www.news18.com/news/politics/mulana-election-results-2019-live-updates-winner-loser-leading-trailing-2356359.html.
- ↑ "Mulana Election Result 2019 LIVE: Mulana MLA Election Result & Vote Share - Oneindia" (in en). One India. https://www.oneindia.com/mulana-assembly-elections-hr-6/.
- ↑ "2 MLAs get Best Legislator Award" (in en). Tribune. 19 March 2021 இம் மூலத்தில் இருந்து 20 ஜூலை 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240720165518/https://www.tribuneindia.com/news/haryana/2-mlas-get-best-legislator-award-227183.