வருவாய் வட்டக் கணக்குகள்
வருவாய் வட்டக் கணக்குகள், தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆண்டு தோறும் பராமரிக்கப்பட வேண்டிய வருவாய் வட்டக் கணக்குப் பதிவேடுகளின் விவரம்: [1]
- “அ” பதிவேடு - கிராமங்களின் எண்ணிக்கை, பெயர், மக்கள்தொகை பற்றிய புள்ளி விவரம் மற்றும் இதர முக்கிய விவரங்கள் குறிப்பிட வேண்டும்.
- “சி” பதிவேடு – அரசு நில குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலங்களைப்பற்றிய பதிவேடு
- “டி” பதிவேடு - பட்டியல் சமூக மக்களுக்கும், மற்றவர்களுக்கும் வழங்கிய நில ஒதுக்கீடு ((Assignment of Land)) செய்யப்பட்ட விவரங்களின் பதிவேடு.
- “எப்” பதிவேடு - நில உரிமை மாற்றம் (Land alienation) செய்யப்பட்ட நிலங்களின் விவரங்களின் பதிவேடு.
- “ஜி” பதிவேடு - வாரிசுதாரர்கள் இல்லாததால் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலங்களின் விவரங்களின் பதிவேடு.
- சாகுபடி செய்யப்பட்ட நிலங்களின் விவரம் மற்றும் சில குறிப்பிட்ட முக்கியமான பயிர்களை விதைத்த மற்றும் மகசூல் விவரங்களின் பதிவேடு
- பயிர்வாரியான நிலக்கணக்கு மற்றும் அப்புலங்களின் மகசூல் விவரம்.
- பலவித இன நிலங்களின் நில அளவுகளைக் காட்டும் கணக்குப் பதிவேடு.
- கைவிடப்பட்ட நிலங்கள் பற்றிய விவரம்
- நிலமாற்றங்கள் குறித்த பதிவேடு
- அரசு மற்றும் மைனர் இனாம் நிலங்களில் உள்ள குறைபாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த நடப்பு பதிவேடு.
- புதிய நில அளவை நிலங்கள் மற்றும் உட்பிரிவுகள் குறித்த நடப்பு பதிவேடு
- ஓவ்வொரு கிராமத்திலும் நிலவரி தள்ளுபடி மற்றும் கழித்தல் விவரங்களைக் காட்டும் கணக்கு
- தண்ணீர் தீர்வை குறித்த பதிவேடு
- நிலவரித்திட்டம் அமுல் செய்யப்பட்ட ரயத்துவாரி கிராமங்களின் நிலவரி கணக்கு விவரம்.
- தோப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலம்
- ரயத்துவாரி கிராமங்களில் வசூலிக்கப்பட வேண்டிய விவரம்.
- ரயத்துவாரி கிராமங்களில் வசூலிக்க முடியாத இனம் பற்றிய விவரம்.
- கால்நடைகள் ம்க்கள் தொகை கணக்குப் பதிவேடு - இப்பதிவேட்டில் கால்நடைகள் மற்றும் சாதிகள் வாரியான மக்கள் தொகை விவரம், மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், சத்துணவு மையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பொதுவான விவரங்களையும் அறிந்து கொள்ளும்படியாக கூடுதலான விவரங்களுடன் பேண வேண்டும்.
- பாசனத்திற்காக உண்மையில் பயன்படுத்தப்படுகின்ற கிணறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்ப்பாசன திட்டங்கள் பற்றிய எண்ணிக்கை மற்றும் அதன் விவரம்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "வட்ட கணக்குகள்". Archived from the original on 2017-10-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-18.