வரே மக்கள்
வரே மக்கள் (Waray people) சமர், பிலிரன், லெய்டே (கிழக்கு விசயாசு) போன்ற தீவுகளைச் சேர்ந்த பிலிப்பைன்சு நாட்டு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் இவர்களுக்கே உரித்தான வரே-வரே மொழியினைப் பேசுகின்றனர். வரேமக்களின் மக்கள் தொகை 3.2 மில்லியன் ஆகும். இவ்வின மக்கள் உரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வின மகளால் பயிரிடப்படும் பிரதான பயிர் தென்னை ஆகும். இவ்வினமக்களின் வாழ்க்கைத் தொழில்களாக விவசாயமும் மீன்பிடியும் திகழ்கின்றன.