வரையறுக்கப்பட்ட போர்

வரையறுக்கப்பட்ட போர் (Limited war) என்பது ஒரு போரியல் கோட்பாடு. போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்க தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவு வளங்களை மட்டுமே பயன்படுத்தி போரில் ஈடுபடுவது வரையறுக்கப்பட்ட போர் எனப்படும். இத்தகு போர் முறையை பின்பற்றும் நாடுகள் அல்லது கூட்டணிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள வளங்கள் மொத்ததையும் (மாந்தர், தொழில் மயம், அறிவியல் ஆய்வு, பொருளாதாரம் போன்றவை) போர் முயற்சிக்கு பயன்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு வளங்களை மட்டும் செலவிட்டு வெற்றி பெற முயலுகின்றன. அவை போரில் வெற்றி பெறுவதை விட வேறு குறிக்கோள்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணம். அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் இடையே நடந்த பனிப்போரின் ஆரம்ப கட்டத்தில் இத்தகு வரையறுக்கப்பட்ட போர்முறையினையே அமெரிக்கர்கள் கையாண்டனர். வியட்நாம் போரும் இத்தகு போர்முறைக்கு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.இக்கோட்பாட்டின் எதிர்மறை ஒட்டுமொத்த போர் எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரையறுக்கப்பட்ட_போர்&oldid=2917572" இருந்து மீள்விக்கப்பட்டது