வரைவு:பேயர்ட் பார்க்கர் அகார்
பேயர்ட் பார்க்கர் அகார் (Braid-Parker agar) என்பது கிராம் பாசிட்டிசவ் ஸ்டேஃபிளோகோகி இனங்களை தனிமைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு அகார் வகையாகும்.இதில் இருக்கின்ற லித்தியம் குளோரைடு மற்றும் டெல்லூரைட், மாற்று நுண்ணுயிர் தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. அதே சமயம் இதில் உள்ள பைருவேட் மற்றும் கிளைசின் ஆகியவை ஸ்டேஃபிளோகோகியின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.ஸ்டேஃபிளோகோகஸ் காலனிகள் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன, அவற்றைச் சுற்றி தெளிவான மண்டலங்கள் உருவாகின்றன[1][2].
வரலாறு:
தொகுபேயர்ட் பார்க்கர் 1962 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட நோயறிதல் மற்றும் கோகுலேஸ்-பாசிட்டிவ் ஸ்டேஃபிளோகோகியை தனிமைப்படுத்தும் நோக்கங்களுக்காக இந்த அகார் ஊடகத்தைப் பற்றிய ஒரு கல்விக் கட்டுரையை முதன்முதலில் வெளியிட்டார்[3]. பேயர்ட் பார்க்கர், முட்டையின் மஞ்சள் கருவை ஒரு நோய் கண்டரியும் பொருளாகவும், சோடியம் பைருவேடை சேதமடைந்த செல்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தினார்[4]. இது இப்போது தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளால் கோகுலேஸ்-பாசிட்டிவ் ஸ்டேஃபிளோகோகியை தனிமைப்படுத்த பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது[5]. பேயர்ட் பார்க்கர் அகார் பொதுவாக உணவு மற்றும் விலங்கு தீவனங்களில் உறைதல்-பாசிட்டிவ் ஸ்டேஃபிளோகோகி (ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் மற்றும் பிற இனங்கள்) கணக்கிடுவதற்கான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்:
தொகு- ↑ "Baird-Parker Agar Base". EMD Chemicals. Archived from the original on 2008-05-01. பார்க்கப்பட்ட நாள் 2008-05-16.
- ↑ "Baird-Parker agar", Wikipedia (in ஆங்கிலம்), 2023-12-04, பார்க்கப்பட்ட நாள் 2024-03-02
- ↑ Baird-Parker, A. C. (1962). "An Improved Diagnostic and Selective Medium for Isolating Coagulase Positive Staphylococci" (in en). Journal of Applied Bacteriology 25 (1): 12–19. doi:10.1111/j.1365-2672.1962.tb01113.x. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-2672.1962.tb01113.x.
- ↑ Baird-Parker, A. C.YR 1963 (1963). "A Classification of Micrococci and Staphylococci Based on Physiological and Biochemical Tests". Microbiology 30 (3): 409–427. doi:10.1099/00221287-30-3-409. பன்னாட்டுத் தர தொடர் எண்:1465-2080. பப்மெட்:13969076.
- ↑ CHOPIN, A.; MALCOLM, S.; JARVIS, G.; ASPERGER, H.; BECKERS, H. J.; BERTONA, A. M.; COMINAZZINI, C.; CARINI, S. et al. (1985-01-01). "ICMSF Methods Studies. XV. Comparison of Four Media and Methods for Enumerating Staphylococcus aureus in Powdered Milk". Journal of Food Protection 48 (1): 21–27. doi:10.4315/0362-028X-48.1.21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-028X. பப்மெட்:30934501.
.