வர்சா சில்பா

வர்சா சில்பா (Varsha Shilpa) என்பவர்கள் தோ தூனி சார் (2010), இஷாக்ஜாதே (2012), ஷுத் தேசி ரொமான்ஸ் (2013), தாவத்-இ-இஷ்க் (2014) போன்ற படங்களுக்கு ஆடை அலங்காரம் வடிவமைத்த இந்திய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒரு இணையினர். தோ தூனி சார் படத்திற்காகச் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான பிலிம்பேர் விருதைப் இவர்கள் பெற்றனர். வயதான தம்பதிகளான ரிசி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோருக்கான இவர்களின் ஆடை வடிவமைப்பு சிறப்புப் பாராட்டைப் பெற்றது.[1] பின்னர் இவர்கள் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், பரினீதி சோப்ரா மற்றும் அறிமுக நடிகை வாணி கபூர் ஆகியோருக்காக ஷுத் தேசி ரொமான்ஸ் (2013) திரைப்படத்தில் ஆடை வடிவமைத்தனர்.[2] பரினீதி சோப்ரா அவர்களின் வழக்கமான ஆடை வடிவமைப்பாளரான இவர்கள் இஷாக்ஜாதே மற்றும் தாவத்-இ-இஷ்க் திரைப்படங்களிலும் இவருக்காக வடிவமைத்துள்ளனர்.

அழகு நயப்புக் காட்சி

தொகு

நடிகை ஹுமா குரேஷி, 29 திசம்பர் 2017 அன்று நடைபெற்ற குளிர்கால அழகு நயப்புக் காட்சியில் வடிவமைப்பாளர் ஜோடியான வர்ஷா வாத்வாவால் வடிவமைக்கப்பட்ட நள்ளிரவு நீல நிற உடைத் தொகுப்பினை அணிந்திருந்தார்.[3]

திரைப்படவியல்

தொகு
  • தி லாஸ்ட் லியர் (2007)
  • க்ராஸி 4 (2008)
  • தோ தூனி சார் (2010)
  • இஷாக்ஸாதே (2012)
  • சுத் தேசி காதல் (2013)
  • தாவத்-இ-இஷ்க் (2014)

விருதுகள்

தொகு
ஆண்டு விருது திரைப்படம் விளைவாக
2011 சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான பிலிம்பேர் விருது தூனி சார் செய் வெற்றி
2014 சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான பிலிம்பேர் விருது சுத் தேசி காதல் பரிந்துரை
2014 சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான திரை வாராந்திர விருது சுத் தேசி காதல் பரிந்துரை

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வர்சா சில்பா

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்சா_சில்பா&oldid=3681004" இலிருந்து மீள்விக்கப்பட்டது