வறியவர் வழக்கு

வறியவர் வழக்கு (Pauper suit) ஒரு நபர் தான் உடுத்தியுள்ள ஆடைகளைத்தவிர வேறு எந்தவிதமான உடமைகளும் இன்றி இருக்கும் நிலையில் அவர் வறியவராக கருதப்படுகிறார்.

பொதுவாக உரிமையியல் நீதிமன்றத்தில் இரு நபர்களிடையே நடைபெறும் ஒரு வழக்கில், வழக்கின் விண்ணப்பதாரர், அந்த வழக்கிற்காக தான் செலுத்த வேண்டிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்திட தன்னிடம் எவ்வித வழிவகையும் இல்லையெனத் தெரிவித்து, தன்னை வறியவராகக் கருதி நீதி மன்ற கட்டணம் செலுத்து வதிலிருந்து தனக்கு விலக்களித்திடக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.[1][2]

இது போன்ற நேர்வுகளில், வழக்கு தொடுத்துள்ள நபர் உண்மையிலேயே வறியவர்தான் என்பதனை அறிந்து வழக்கினை அனுமதித்திட மாவட்ட ஆட்சியரிடமிருந்து நீதிமன்றம் அறிக்கை கோர வேண்டும். வழக்கு தொடுத்துள்ள நபர், விசாரணையின் அடிப்படையில் உண்மையிலேயே வறியவர் என முடிவு செய்து மாவட்ட ஆட்சியர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிமையியல் நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.

வறியவருக்கான விளக்கம் தொகு

உரிமையியல் விதி தொகுப்பு நூல் பிரிவு 33-ல் (Civil Procedure Code XXXIII) வறியவர் என்பவருக்கான விளக்கம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.[3]

  • நீதிமன்றக்கட்டணம் செலுத்த வசதி இல்லாதவர்.
  • ரூ.1000-க்கு மேல் சொத்துக்கள் ஏதும் இல்லாதவர். (வழக்கில் உள்ள சொத்துக்கள் தவிர்த்து)
  • வழக்கு தொடுத்த பிறகு ஏதேனும் சொத்துக்களை இரண்டு மாதங்களில் விற்பனை செய்யும் நேர்விலும் அல்லது சொத்துக்களை வாங்கும் நேர்விலும் - வறியவராக கருத இயலாது.
  • வழக்கு தொடுத்த நபர், தனது உறுதி ஆவணத்தில் (Affidavit) தனக்கு உள்ள சொத்து விவரங்களைப் பட்டியலிட்டு உறுதி அளித்து கையெழுத்திட்ட குறிப்பிடப்பட்ட அச்சொத்துக்கள் தவிர்த்து வேறு ஏதேனும் சொத்துக்கள் இருப்பின் அவர் வறியவராக கருதப்படமாட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "PAUPER SUIT". Archived from the original on 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
  2. "Short notes on Informa Pauparis". Archived from the original on 2017-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
  3. CODE OF CIVIL PROCEDURE, 1908 - ORDER XXXIII

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வறியவர்_வழக்கு&oldid=3719597" இலிருந்து மீள்விக்கப்பட்டது