வலிய எலும்பே! வழுவழுப்பான மூட்டே! (நூல்)
வலிய எலும்பே! வழுவழுப்பான மூட்டே! என்பது முடநீக்கியல் துறையியல் பேராசிரியர் மருத்துவர் கோ. அன்பழகன் எழுதி தமிழ்முனை பதிப்பகம் வெளியிட்ட மருத்துவத் தமிழ் நூல்.[1] இந்நூலுள் டென்னிஸ் முழங்கை, சிறுகீறல் அறுவைசிகிச்சை, குதிக்கால் வலி, மணிக்கட்டு வலி, எலும்பு நைவு, ஊதைசார் மூட்டழற்சி, படிகத்தேக்க நோய், எலும்புருக்கி நோய், சர்க்கரை நோய்க் கால்புண், எலும்புக் குடமத் தொற்று மற்றும் எலும்பு வங்கி ஆகிய பத்து தலைப்புகளில் மருத்துவக் கட்டுரைகளும் இணைப்பாக மருத்துவ மாமேதை மறைமலை அடிகளார் எனும் தலைப்பிலான பகுதியும் உள்ளன.
நூலாசிரியர் | பேராசிரியர் மரு.கோ.அன்பழகன் |
---|---|
உண்மையான தலைப்பு | வலிய எலும்பே! வழுவழுப்பான மூட்டே! (இணைப்பு: மருத்துவ மாமேதை மறைமலை அடிகளார்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொருண்மை | மருத்துவக் கட்டுரைகள் |
வெளியீட்டாளர் | தமிழ் முனை பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | திசம்பர் 2007 |
பக்கங்கள் | 476 |
சிறப்பு
தொகு- இந்த நூலுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளில் ஒன்றான பெ. நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தினமலர் தளத்தில் உள்ள தகவல்". பார்க்கப்பட்ட நாள் May 14, 2012.