பெ. நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது
பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும். தமிழில் வெளியான சிறந்த அறிவியல் நூல்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.
விருது பெற்ற நூல்கள்
தொகுஆண்டு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|
2012 | வலிய எலும்பே வலுவழுப்பான மூட்டே | கோ. அன்பழகன் | தமிழ்முனை பதிப்பகம் |
2013 | நேனோ - அடுத்தபுரட்சி | மோகன் சுந்தரராசன் | தேசிய புத்தக அறக்கட்டளை |
2014 | நீரிழிவு நோய் முதல் புற்றுநோய் வரை உணவு மருத்துவம் | சு. நரேந்திரன் | கற்பகம் பதிப்பகம் |
2015 | நெட்வொர்க் தொழில்நுட்பம் | மு. சிவலிங்கம் | பாரதிபகத் பதிப்பகம் |
2016 | சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது | கு. கணேசன் | சூரியன் பதிப்பகம் |
2017 | நீர் மேலாண்மை | ப.மு. நடராஜன் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |