வலிவல மும்மணிக்கோவை

வலிவல மும்மணிக்கோவை [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான் என்னும் கருத்துப் பாடலை [2] இவரது பாடல் [3] வழிமொழியும் ஒப்புமைப் பாங்கில் உள்ளதால் இந்த நூல் அந்த நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது. திருவலிவலம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடும் நூல் இது.

பாடல் - எடுத்துக்காட்டு

தொகு

(பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது) சிவ-சின்னம்

முண்டத்து இலங்கும் வெண் திருநீறும்
எண்தரு சிறப்பில் கண்ணிகை மாலையும்
ஓதும் அஞ்செழுத்தின் உண்மை செஞ்சு அழுத்தலும்
ஒடியா நேயமும்

கம்பராமாயணம் அடிகளை [4] ஒற்றிப் பாடப்பட்ட பாடல்

அன்று எனின் அன்றாய் அம் எனின் அதுவாய்
ஒன்று எனின் ஒன்றாய் பல எனின் பலவாய்
நின்றது உன் நிலைமை.

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 230. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. கற்றார் யம்படர் சூலமும் பாசமும் சுற்றிச் சுற்றி, இற்றார் எனக் கழுத்தில் கருக்கு இட்டு நின்றீர் (கந்தரலங்காரம்)
  3. கூற்றன் விடும் கயிற்றால் கழுத்தில் கருக்கு இட்டு இழுக்கும் அன்றோ (வலிவல மும்மணிக்கோவை பாடல் 2)
  4. ஒன்றே என்னின் ஒன்றே ஆம், பல என்று உரைக்கில் பலவே ஆம்
    அன்றே என்னில் அன்றே ஆம் ஆமே என்னில் ஆமே ஆம்
    இன்றே என்னில் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம்
    சன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பியைப்பு அம்மா (யுத்த காண்டம், கடவுள் வாழ்த்து)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிவல_மும்மணிக்கோவை&oldid=1881144" இலிருந்து மீள்விக்கப்பட்டது