வலைக் கவசம்
வலைக்கவசம்[1] (ஆங்கிலம்: Mail, மெயில்) என்பது சிறிய உலோக வளையங்களை, ஒரே தோரணையில் பிணைக்கப்பட்ட வலை போன்ற அமைப்புடைய ஒரு வகைக் கவசமாகும்.
பெயரிடுதல்
தொகுகால்சட்டையாக அணியும் வலைக்கவசத்தை ஆங்கிலத்தில் ஷோஸ், என்றும் தலையில் முக்காடிட்டால் அதனை காய்ஃப் என்றும் அழைப்பர். கழுத்தை பாதுகாக்க தலைக் கவசத்திலிருந்து தொங்கும் வலையை கேமெயில் அல்லது எவென்டெயில் என்பர். முட்டி வரை நீளும் வலையாலான சட்டையை ஓபெர்க்கு என்றும், அதுவே தொடை வரை நீண்டிருந்தால் ஓபெர்ஜியான் எனப்படும். துணிக்கிடையில் உள்ள வலைக்கவசத்தை ஜசெரன்ட் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.
இடைக்கால ஐரோப்பாவில், இடுப்பு வரை இருக்கும் சட்டையை பையர்ணி என்பர்.
யப்பானிய வலைக்கவசம்
தொகுயப்பானில், வலைக்கவசம் குசாரி எனப்படும். அதன் பொருள் 'வலை' ஆகும்.
விளைபயன்
தொகுவலைக்கவசம் வெட்டும் மற்றும் துளைக்கும் ஆயுதங்களுக்கு எதிரான ஸ்திரமான தடுப்பாக விளங்கியது. பொதுவாக, வலைக்கவசத்தின் திறன் நான்கு காரணிகளால் தீர்மானிக்கபடுகிறது: பிணைப்பின் வகை (தறைத்த, அல்லது உருக்கியிணைத்த), பிரயோகிக்கப்பட்ட பொருள் (இரும்பு, வெண்கலம், அல்லது எஃகு), நெசவு அடர்த்தி (நெருக்கமான நெசவை ஊடுருவ மெல்லிய ஆயுதம் தேவை), மற்றும் வளையத்தின் தடிமன் (1.02–1.63 மி.மீ. தடிமன் கொண்ட கம்பி). வளையங்கள் சரியாக தறைக்காவிட்டால், ஈட்டிகளின் பலமான தாக்கத்தால் கவசத்தை ஊடுருவ முடியும்.
இக்கவசத்தின் நெகிழும் தன்மையால், அணிபவர் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவார்,[2] இது மோசமான சிராய்ப்புகள் அல்லது எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும். இதனால் தலையைக் காக்க தனியாக ஒரு தலைக்கவசம் அணியவேண்டியிருக்கும். அதேபோல், கதாயுதம் மற்றும் போர் சுத்தியல் போன்று கூரற்ற ஆயுதங்களின் தாக்கம் கவசத்தை ஊடுருவாமலே அணிபவரை பாதிக்கும்.
படிமை
தொகு-
ஈடோவின் 1880-களின் யப்பானிய (சாமுராய்) வலைக் காலுறை அல்லது குசாரி டாபி.
-
ஈடோ காலத்தின் யப்பானிய வலைச் சட்டை அல்லது குசாரி கட்டபிறா.
-
ஈடோ காலத்தின் யப்பானிய (சாமுராய்) வலைக் கையுறை அல்லது குசாரி ஹான் கோட்டே.
-
யப்பானிய தறைத்த வலைக்கவசத்தின் அரிய உதாரணம்.
-
ஈடோ காலத்து யப்பானிய (சாமுராய்) குசாரி.
-
17-ஆம் நூற்றாண்டு, முகலாயரின் தறைத்த வலைக்கவசம் சிறா பாக்தர்.
-
முகலாயரின் தறைத்த வலை முக்காடான குல்லா சிறா.
-
இந்திய தேட்டா இணைப்பு அல்லது கம்பித்தடுப்பு இணைப்பு (வலை) கவசம், 17-ஆம் நூற்றாண்டு.
-
ஓட்டோமான் தறைத்த வலைக்கவசம், 16-ஆம் நூற்றாண்டு.
-
ஐரோப்பிய ஆப்பு தறைத்த வலைக்கவசம், வளையங்களின் இருபக்கமும்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "chain mail" Cambridge dictionaries online
- ↑ D. Edge and J. Paddock.