வலையேற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இணைய பக்கங்களை வலையமைப்பு வழங்கணினி (Server) யில் பதிவேற்றம் செய்வது வலையேற்றம் (Hosting / Web Hosting) ஆகும். இணைய வழங்கணினியில் பதிவேற்றப்பட்ட பக்கங்களையே பயனாளர்கள் காண இயலும்.
இணையபக்கங்கள் ஹெச் டி எம் எல் (HTML) போன்ற நிரல் குறையீட்டு மொழிகளால் உருவாக்கப்படுகின்றன. அவை வெறும் எழுத்துநடை கோப்புகளாகும். இக்கோப்புகள் சில் சிறப்புக் குறியீடுகள் (Tag) இணைய உலவிகள் அந்த கோப்பை எவ்வாறு காட்ட வேண்டும் என்பதற்காக அமைந்த குறியீடுகளாகும். உலாவிகள் குறியீடுகளின் படி செயல்பட்டு உரைநடை பகுதியை மட்டும் பயனாளருக்கு காட்டும். இந்த பக்கங்களே இணைய பக்கங்களாகும். அவை வழங்கணினியில் பாதுகாக்கப்படுகிறது.