வலைவாசல்:ஆசியா/தகவல்கள்/1
- உலகின் உயரமான மலையான எவரெசுட்டு சிகரம் (படம்) ஆசியாவில் அமைந்துள்ளது.
- 1970 ஆம் ஆண்டிலிருந்து நலவியல், கல்வி ஆகியவற்றினுடைய மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான நேப்பாளம் விளங்குகிறது.
- மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் சப்பானும், தென்கொரியாவும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன.
- ஆசியா யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதி ஆகும்.
- "எத்னாலாக்" தரும் தகவல்களின்படி, ஆசியாவில் உள்ள துணைகண்டமான இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.