வலைவாசல்:ஆசியா/முகவுரை

ஆசியா உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். பொதுவாக ஆசியா யுரேசியாவின் கிழக்கு ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:ஆசியா/முகவுரை&oldid=1568460" இலிருந்து மீள்விக்கப்பட்டது