வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/10
- சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் நாகாபரணம் வாசுகியாகும். இந்த பாம்பே பாற்கடல் கடைய கயிறாக பயன்படுத்தப்பட்டது.
- தேவலோக நதியான கங்கையை பூமிக்கு கொண்டுவந்தவன் பகிரதன் என்பதனால் கங்கைக்கு பாகீரதி என்ற பெயருண்டு.
- பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், நெய், தயிர் என்ற ஐந்திலிருந்து தயாரிக்கப்படும் உயிரி நீர்மக்கலவை பஞ்சகவ்யம் எனப்படுகிறது.