வலைவாசல்:இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்
பயன்பாடு
தொகுஇஸ்லாமிய நபர்கள் துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/வடிவமைப்பு.
இஸ்லாமிய நபர்கள்
தொகுவலைவாசல்:இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/0
இமாம் ஷாமில் (ஆங்கிலம்:Imam Shamil) (26 ஜூன் 1797-4 பெப்ரவரி 1817) (சாமீல் என உச்சரிக்கப்படுகின்றது) ஸாமய்ல்,சாமில் மற்றும் சாமீல் எனவும் அழைக்கப்படுகின்றார்.இவர் வடக்கு கவ்காசஸ், இன்றைய செச்னியாவின் அவார் இனக்குழுவைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் மற்றும் சமயத் தலைவராக இருந்தவர். அவர் நக்ஷபந்தியா சூபி வலையமைப்பின் ஒரு ஆன்மிக வழிகாட்டியும் ஆவார். கவ்காஸ் யுத்தத்தின் போது ரஷ்ய எதிரப்புப் படையின் தலைவராகவும், கவ்காஸ் இமாமத்தின் (1834-1859) மூன்றாவது இமாமாகவும் இருந்தவர்.
இமாம் ஷாமில் அவர்கள் பிறந்த காலப்பகுதயில் ரஷ்யப் பேரரசு, உதுமானியப் பேரரசுக்குள் தனது அரசின் நிலப்பரப்பை விரிவுபடுத்திக்கொண்டிருந்தது. ரஷ்ய படையெடுப்பினால், பல கவ்காசஸ் நாடுகள் ஒன்றுபட்டு ரஷ்யாவின் படையெடுப்புக்களை எதிரத்துவந்தது இது கவ்காசஸ் போர் என அறியப்படுகின்றது.கவ்காசஸ் ரஷ்ய எதரிப்பு படையின் ஆரம்ப தலைவர்களாக செயக் மன்சூர் மற்றும் காஸி முல்லா ஆகியோர் இருந்தனர்.ஷாமிலின் சிறுபராய நண்பராக காஸி முல்லா இருந்தார். பின்னர், காஸி முல்லாவின் சீடராகவும், ஆலோசகராகவும் மாறினார்.
வலைவாசல்:இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/1
முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி (Muhammad ibn Mūsā al-Khwārizmī,அரபு:عَبْدَالله مُحَمَّد بِن مُوسَى اَلْخْوَارِزْمِي) ஒரு பாரசீகக் கணிதவியலாளரும், வானியலாளரும், புவியியலாளரும் ஆவார். இவர் பொ.கா 780 ஆம் ஆண்டளவில் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும், அக்காலத்தில் குவாரிசும்(Khwārizm) என்று அழைக்கப்பட்ட இடத்தில் பிறந்தார்.[3] by Ibn al-Nadim. இவ்விடம் அக்காலத்தில் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் கிபி 850 ஆம் ஆண்டளவில் இறந்தார். அராபியப் புவியியலின் ஆரம்ப கர்த்தா எனக் கூறப்படும் இவர் ஒரு கணிதமேதையாகவும் வானியல் அறிஞராகவும் விளங்கினார். இந்திய எண்கள் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. படிமுறைத் தீர்வு எனப்படும் Algorithm மற்றும் பதின்ம இட எண்முறை (Algorism) ஆகியவை இவரின் இலத்தீன் மொழிப்பெயரான அல்கோரித்மி (Algoritmi) என்னும் பதத்திலிருந்து உருவானதாகும்.[4] இவர் இயற்கணிதவியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். கிபி 820 ஆம் ஆண்டளவில் இவரால் எழுதப்பட்ட இயற்கணிதம் என்பதே ஒருபடிச் சமன்பாடு, இருபடிச் சமன்பாடு என்பவற்றின் முறையான தீர்வுகள் தொடர்பான முதல் நூலாகும். பலர் இவரை இயற்கணிதத்தின் தந்தை என்கின்றனர்.
வலைவாசல்:இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/2
இப்னு கல்தூன் என அழைக்கப்பட்ட அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ (அரபு மொழி: أبو زيد عبد الرحمن بن محمد بن خلدون الحضرمي , , (மே 27, கிபி 1332 /732 AH – மார்ச் 19, கிபி 1406 /808 AH)), ஒரு வட ஆப்பிரிக்கப் பல்துறையாளர் ஆவார். வட ஆபிரிக்காவிலுள்ள இன்றைய தூனிசியப் பகுதியில் பிறந்த இவர் வானியல், பொருளியல், வரலாறு, இசுலாம், இசுலாமிய இறையியல், நீதித்துறை, சட்டம், கணிதம், படைத்துறை உத்திகள், மெய்யியல், சமூக அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். இவர் ஒரு அராபிய அல்லது பர்பர் இனத்தைச் சேர்ந்தவர். இவர், மக்கட் பரம்பலியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்றுவரைவியல், வரலாற்று மெய்யியல், சமூகவியல் போன்ற பல சமூக அறிவியல் துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அறிஞரும், மெய்யியலாளருமான சாணக்கியருடன் இவரும் தற்காலப் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகின்றனர்.பலர் இவரை இத்தகைய பல சமூக அறிவியல் துறைகளினதும், பொதுவாகச் சமூக அறிவியலினது தந்தையாகவும், மனித வரலாற்றை அறிவியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்த வரலாற்று மேதையாகவும், வரலாற்றுத் தத்துவத்தை தோற்றுவித்த மாபெரும் அறிஞராகவும் கருதுகிறார்கள்.
வலைவாசல்:இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/3 ஜலால் அத்-தின் முகமது ரூமி (Jalāl ad-Dīn Muḥammad Rūmī, جلالالدین محمد رومی)என்றும் ஜலால் அத்-தின் முகமது பல்கி (Jalāl ad-Dīn Muḥammad Balkhī, பாரசீகம்: جلالالدین محمد بلخى ) என்றும் பரவலாக துருக்கியிலும் ஈரானிலும் ஆப்கானித்தானிலும் மௌலானா[4] (பாரசீகம்: مولانا) என்றும் ஆங்கிலம் பேசும் உலகில் ரூமி என்றும் அறியப்படுபவர் (30 செப்டம்பர் 1207 – 17 திசம்பர் 1273) பதின்மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர்.கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.ரூமியின் படைப்புகள் அனைத்தும் பெர்சிய மொழியில் எழுதப்பட்டவை. இவரின் மானஸ்வி தூய்மையான பெர்சிய இலக்கிய பெருமையை கொண்டது. இது பெர்சிய மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இன்றளவும் இவரது படைப்புகளை பெருமளவு பெர்சியர்கள் பெர்சிய மொழியிலேயே படித்து வருகிறார்கள். (இரான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் பெர்சிய மொழிபேசும் மக்கள்). இவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஏனைய நாடுகளில் மிகுந்த புகழுக்குரியதாக இருக்கின்றன. இவரின் கவிதைகள் பெர்சிய, உருது, பஞ்சாபி மற்றும் துருக்கிய இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்யிருக்கின்றன
வலைவாசல்:இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/4
இப்னு பதூதா (Ibn Battuta-1304) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா, மையக் கிழக்கு, இந்தியத் துணைக் கண்டம், நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார். இவர் கடந்த தூரம் இவருக்கும் முன் பயணம் செய்தவர்களும், இவரது கிட்டிய சமகாலத்தவரான மார்க்கோ போலோவும் கடந்த தூரங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது. இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.மொராக்காவில் உள்ள டேன்ஜீர் என்ற சிறிய நகரத்தில் 1304 ஆம் ஆண்டில் ஒரு நீதிபதியின் மகனாகப் பிறந்தவர் இபின் பதூதா. சிறு வயதிலேயே மதக் கல்வியும் அரபி இலக்கணமும் பயின்றார். இஸ்லாமிய நெறிகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த குடும்பம் என்பதால் அவரது கனவம் முழுமையும் இறையியல் மீதாகவே உருவானது. தனது 20 ஆம் அகவையில் இபின் பதூதா மெக்காவிற்குப் புனிதப் பயணம் துவங்கினார். புனிதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகத் துவங்கிய இந்தப் பயணமே அவரை உலக நாடுகளுக்கு இட்டுச் சென்றது.
முன்மொழிதல்
தொகுஇந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்கள் பற்றிய கட்டுரைத் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.
{{{text}}}